ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Sunday, November 7, 2010

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து செயற்படுவேன் - ஒபாமா

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தான் தாஜ் ஹோட்டலில் தங்குவதற்குத் தீர்மானித்திருப்பதே பயங்கரவாதத்துக்கு எதிரான சக்தி வாய்ந்த செய்தியாகும் என தெரிவித்துள்ளார்.
மும்பைத் தாக்குதலைத் திட்டமிட்டவர்கள் நீதி முன்கொண்டு வரப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, நவம்பர் 26 தாக்குதலில் பலியானவர்களுக்குத் தனது அஞ்சலியையும் தெரிவித்துக் கொண்டார்.

அவர் உரையாற்றுகையில்; கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்த ஹோட்டலும் ஒன்று. அந்தத் தாக்குதலை நாம் என்றும் மறக்க முடியாது. ஆனால், அந்தத் தாக்குதலை இந்திய மக்கள் மிகுந்த மனப் பலத்துடன் எதிர்கொண்டனர். அந்தக் கொலையாளிகளிடம் மக்கள் பணிந்து விடவில்லை.
அந்தத் தாக்குதலுக்கு அடுத்த நாளிலேயே மும்பை நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. தாக்குதலால் முடங்கிவிடாமல் தமது பணிகளை உடனே தொடங்கினர். தாஜ் ஹோட்டலும் அடுத்த ஒரு மாதத்தில் மீண்டும் விருந்தினர்களை அனுமதிக்க ஆரம்பித்தது. ஹோட்டல் முடங்கிவிடாமல் மீண்டும் எழுச்சி கொண்டு நின்றது. அதே போல் மும்பையும் இந்த மாபெரும் தேசம் தனது இயல்பு வாழ்க்கைக்கு உடனே திரும்பின. அது இந்திய மக்களின் பலத்தை வெளிக்காட்டியது.

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும். மும்பை போன்ற மற்றொரு தாக்குதல் நடந்து விடாமல் தடுக்க இரு நாடுகளும் தேவையான உளவு இரகசியங்களைப் பகிர்ந்து வருகிறோம். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தான் சந்திக்கும்போது பயங்கரவாதத்துக்கு எதிரான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இந்தச் சக்திவாய்ந்த சத்திரப் புகழ்பெற்ற நகரத்துக்கு நாங்கள் வருவதனையிட்டு ஆழமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
நாங்கள் இங்கு வருவது ஏதாவது செய்தியைத் தெரிவிக்கவா என்ற கேள்வி எழுப்பப்படுமானால் அதன் பதில் “ஆம்' என்றே அமையும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது மனைவி மிச்செல் ஒபாமாவுடன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அவர், விருந்தினர் வருகை புத்தகத்தில் கையெழுத்திட்ட பின்னர் நவம்பர் 26 தாக்குதலில் பலியானவர்களுக்காக நிறுவப்பட்டுள்ள நினைவுப் படிகத்தையும் பார்வையிட்டார்.

அவர் தனது ஆறு நிமிடப் பேச்சின்போதும் மும்பை நகர மற்றும் இந்திய மக்களைப் புகழ்ந்துரைத்ததுடன் அவர்களின் மனவுறுதியையும் சகிப்புத்தன்மையையும் பாராட்டினார்.

No comments:

Post a Comment