ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Saturday, November 6, 2010

ஜோக்ஸ்

செல்போன் பேலன்ஸ்

"ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"
"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"
அ.பேச்சியப்பன், ராஜபாளையம்


 "அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக்
 கிளம்பிடுவாரு..."
"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
எஸ்.ஏ.கருணாநிதி, ஓசூர்


"டாக்டர்.... சாதம் சாப்பிட்டா வெயிட் போடுவோமா?"
"இல்லியே, வெயிட் போட்டாத்தான் சாதமே சாப்பிட முடியும்...!"
"நீங்க என்ன சொல்றீங்க...?"
"நான் குக்கர்ல போடற வெயிட்டை சொல்றேன்!"
கூடல்


"விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, "பேசாம" நீங்க பெரிய 
பேச்சாளர் ஆயிடலாமே!"
"பேசாம" எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"
கூடல்


போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே,
 உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?
திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.
எம்.எஸ்.ராஜப்பா

No comments:

Post a Comment