ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Sunday, May 8, 2011

மன்மோகன் சிங்கும், கருணாநிதியும் பேசிக் கொள்கிறார்கள்


மன்மோகன் : கலைஞர்ஜி உண்மைய சொல்லுங்க, அந்த 2 லட்சம் கோடி எங்க?

கலைஞர் : சொல்றேன்பா, இவ்வளவு நாளா என் மனசில பூட்டி வச்சிருக்கற குடும்ப ரகசியத்தை சொல்றேன், இது கடுகளவு வெளிய கசிஞ்சாலும் என்ன நீங்க உயிரோடவே பார்க்க முடியாது..!

மன்மோகன் : ஒக்கே சொல்லுங்க..

கலைஞர் : ரொம்ப நாளா கனிமொழிய ராசா வச்சிருக்கறதா ஊருக்குள்ள ஒரு வதந்தி, அத கேட்டு கோவப்பட்ட நான் அவன் சட்டைய புடிச்சி, ஏண்டா என் மகள நீ வச்சிருக்கியாடா ன்னு கேட்டேன், அவன் சிம்பிளா ஒரு பதில சொன்னான்

மன்மோகன் : என்ன பதிலு?

கலைஞர் : கனிய நான் வெச்சுக்கறேன், ’’மணி’’ய நீ வெச்சுக்கன்னு சொன்னான்.

மன்மோகன் ; அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?

கலைஞர் : பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்த்த ு, நானும் ஒத்துக்கிட்டேன்

Saturday, April 16, 2011

ரஜினி பேச்சு?-வறுத்தெடுத்த கருணாநிதி!

தேர்தலில் வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம்.

ஆனால் தமிழ் சினிமாவில் உச்ச அந்தஸ்தை 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்துவரும், ஏதோ ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியில் அமர்ந்துவிடமாட்டாரா என ரசிகர்களால் நம்பப்படும் (இன்னமும்) ரஜினிகாந்த், இந்த விஷயத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சறுக்கியிருக்கிறார்.

நேற்று அவர் வாக்களித்த போது, எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் அம்பலமாகிவிட்டது. பொதுவாக அவர் வாக்களிக்க வரும்போது, ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு மீடியாக்காரர்கள் மொய்த்துக் கொள்வார்கள். நேற்றும் அப்படித்தான் நடந்தது.

அவர் வாக்களிக்கும் இடத்துக்குச் சென்றபோதும் காமிராக்கள் துரத்தின. அவர்களை அப்புறப்படுத்த ரஜினியும் முயற்சிக்கவில்லை. அவருடன் வந்திருந்தவர்களும் முயற்சிக்கவில்லை. இதனால் அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை அப்படியே தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துள்ளனர் புகைப்படக்காரர்களும் தொலைக்காட்சி கேமராமேன்களும். அவர் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை!

ஓட்டுப் போட்ட கையோடு, வாக்குச் சாவடியில் எதுவும் பேசாமல் நேராக வீட்டுக்குப் போனவரை, ஆங்கிலச் சேனல்கள் வாயைப் பிடுங்க, அவரும் ஊழல், விலைவாசி, விவசாயிகள் நலன், அடுத்த முதல்வர் என்றெல்லாம் அடித்துவிட்டார்.

விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. அதன்பிறகுதான் ஆரம்பித்தது. ரஜினி வாக்களிப்பதை படம் பிடித்தவர்களில் சிலரது ஒளிநாடாக்கள் கோபாலபுரத்துக்கும், முக்கிய தொலைக்காட்சி சேனல்களுக்கும் போய்ச் சேர, ஆட்சி மேலிடம் ஏக அப்செட்.
இந்த நிலையில், நேற்று மாலையே முதல்வர் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் பார்க்க வேண்டிய சூழல் ரஜினிக்கு. ரஜினி ஓட்டுப் போட்ட விவகாரம் முதல்வருக்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டதால், ரஜினி வருவாரா மாட்டாரா என்று எல்லோரும் காத்திருந்தார்கள். ஒருவழியாக வந்தார். ஆனால் முதல்வருடன் அவரால் சகஜமாக இருக்க முடியவில்லை என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள்.

முதல்வருடன் இருந்த ஒரு முக்கிய அதிகாரி நம்மிடம் இப்படிச் சொன்னார்: "படம் ஆரம்பிக்குமுன், அங்கு நின்றிருந்த வைரமுத்துவிடம், 'நீங்களெல்லாம் இந்த மனிதருக்கு (ரஜினிக்கு) எந்த அளவு பரிந்து பேசியிருக்கிறீர்கள். ஆனால் இவர் செய்திருக்கிற வேலையைப் பார்த்தீர்களா... இவரது நம்பகத்தன்மை தெரிகிறதா.. வாக்களிப்பது அவர் இஷ்டம். ஆனால் அதைப் படம்பிடிக்கவும் அனுமதித்திருக்கிறார்கள். அடுத்து அவர் அளித்த பேட்டி.. விலைவாசி நாடெங்கும் உள்ள பிரச்சினை. ஆனால் நமது அரசு அதைத் தீர்க்க எடுத்த முயற்சிகள் தெரியாதா.. விவசாயிகளுக்கு இந்த அரசை விட அதிகம் செய்தது யார்.... இதெல்லாம் சரிதானா?", என்று முதல்வர் கேட்க, இருக்கையில் உட்கார முடியாமல் நெளிந்த ரஜினி, படம் முடிந்த கையோடு, காரில் ஏறிப் பறந்தாராம்!

ஆட்சியாளர்களிடம் மிகுந்த நெருக்கமாக இருந்த ரஜினியின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், அந்த 'பத்திரிக்கை ஆசிரியரான அரசியல் தரகர்' கம் விமர்சகர்தான் என்றும் உடன் படம் பார்த்தவர்களிடம் கமெண்ட் அடித்தாராம் முதல்வர்!

ஏற்கெனவே 2004ம் ஆண்டு தேர்தலில் பாமக மீதான கோபத்தில், அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாக்களித்தேன் என வெளிப்படையாகக் கூறி ரஜினி சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
கருணாநிதியிடமும் ஜெயலலிதாவிடமும் நீங்கள் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகளை எழுதி அனுப்புங்கள் என்று என் இணைய தள வாசகர்களைக் கேட்டிருந்தேன். நூற்றுக் கணக்கில் கேள்விகள் வந்து குவிந்துவிட்டன. அவற்றிலிருந்து தொகுத்து சில கேள்விகளை இங்கே நாகரிகமான மொழியில் தந்திருக்கிறேன். இப்போதைய ஆளும் கட்சி என்பதால் கருணாநிதிக்கு 20 கேள்விகள். ஜெயலலிதாவுக்கு 15 கேள்விகள். இருவருக்கும் பொதுவாக 8 கேள்விகள். பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட சளைக்காத இருவரும், இந்தக் கேள்விகளுக்கு நேரடியாக பதில் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.

ஜெயலலிதாவுக்கு:

1. உங்களை விட்டால் கட்சியில் வேறு தலைவரே இல்லையே? இப்படி ஒரு கட்சி நடத்துவது சரியா?

2. சட்டமன்றக் கூட்டத்துக்கே நீங்கள் போகவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக ஒழுங்காக வேலை பார்க்காத உங்களை ஏன் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் ?

3. யாருமே நெருங்கமுடியாத தலைவராக உங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களை சந்திக்க உங்களுக்குப் பிடிக்காவிட்டால், அரசியலிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியாக தனியே வாழவேண்டியதுதானே?

4. அ.தி.மு.கவை சசிகலா குடும்பம்தான் ஆக்ரமித்து நடத்திக் கொண்டிருக்கிறது. இதை மாற்ற ஏதாவது திட்டம் உண்டா?

5. கூட்டணிக் கட்சிகளை மதிக்காமல் இஷ்டப்படி கூட்டணிகளை உடைப்பது உங்கள் வழக்கம். இந்த அணுகுமுறை மாறுமா?

6. இலவசங்கள் தவிர, உங்கள் பத்தாண்டு ஆட்சியில் சமூக, பொருளாதார, சுற்றுச் சூழல் தொடர்பாக ஏதாவது உருப்படியான நடவடிக்கைகள் செய்தது உண்டா?

7. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் முறைகேடுகளைக் கண்டித்து எத்தனை போராட்டங்களை நீங்கள் தலைமை ஏற்று நடத்தினீh;கள்?

8. ஒரு பெண்ணாக இருந்தும் ஏன் பெண்களுக்கு 35% சீட் தரவில்லை?

9. சகமனிதனை – பெண்ணாக / ஆண்ணாக இருந்தாலும் – காலில் விழச்செய்து புகைப்படம் எடுத்து வெளியிடும், அருவருப்பான கலாச்சாரத்தை / மனநிலையை எப்போது விடப் போகிறீர்கள்?

10. காஞ்சி சங்கராசாரியார் மீதான வழக்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் எவ்வாறு திசை திருப்பபட்டது ? அதை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?

11. மாதம் முழுவதும் கூலி வேலை செய்யும் வயதுவந்த பெண்களின் வலி உங்களுக்கு தெரியுமா? பள்ளி / ரேசன் கடை மூலம் வயதுவந்த ஏழைப் பெண்களுக்கு நாப்கின்களை இலவசமாக (அ) குறைந்த விலைக்கு வழங்கும் திட்டத்தை நீங்கள் செயல்படுத்த சிந்திக்காதது ஏன் ?

12. மக்களை பிச்சைகாரர்களாக ஆக்கும் இலவசங்களை தி.மு.க வுக்கு போட்டியாக நீங்களும் அறிவிப்பது ஏன்?

13. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது மக்களை திரட்டி போராடி ஈழ பொதுமக்களை காப்பாற்ற முயலாதது ஏன்?

14. (மக்களின் உணர்வு அறிந்தும்) இனியாவது ஊழலளற்ற ஆட்சி தருவேன் என்ற உறுதி மொழி உங்கள் தேர்தல் அறிக்கையில் இல்லாமல் போனது ஏன்?

15. கருணாநிதி குடும்ப அரசியலை இவ்வளவு வசைபாடும் நீங்கள் அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் கட்சியிலும் ஆட்சியிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்திரின் தலையீடு இருக்காது என உறுதி கூற முடியுமா?கருணாநிதிக்கு:

1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை, வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ?

2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால், நாளைக்கு பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே நடத்துமா?

3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூசைக்கு செல்வதாக செய்தி வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள்,. நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?

4. முதல்வராக சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன் உங்கள் கட்சியே தனித்து எல்லா தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக் கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?

5. பெயருக்கு ஒரு பட்டப் படிப்பு படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல், கோடிக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?

6. உங்கள் குடும்ப பிரச்சனையில் 3 பேரை தீயிட்டு கொளுத்தியதை நினைத்தபோதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?

7. தமிழக அரசிற்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படி திருப்பிச் செலுத்த்ப் போகிறீர்கள் ? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா?

8. இலவச ஆயுள் காப்பீட்டு திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை அதற்கு பதில் ஏற்கனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த செலவிடாதது ஏன் ? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா ?

9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக் குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தமிழ்க் கலாசாரத்துக்கு விரோதமானது. தவறான முன்னுதாரணம் என்பதை உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? என்னைப் பின்பற்றவேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா?

10. கூவத்தை தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம் போட்டீர்கள். அந்த பணம் என்னவாயிற்று ? ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா?

11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள் திரிகிறார்கள் ? ஏன் ஆயிரக்கணக்கான்வர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள் ? ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?

12. ஐந்தாண்டுகளாக வெளி நாட்டில் வாழ்கிறேன். ஒரு அரசு ஊழியருக்கோ ஒரு காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசு கூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள் கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வொரு இடத்திலும் என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு ?.

13. மின் வெட்டை தடுக்க 5 ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

14. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக சொன்னீர்களே ஏன் செய்யவில்லை?

15. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்கு சண்டையிட்ட உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில் ஈழப்பிரச்சினையை எப்படி கையாண்டிருப்பீh;கள்?

16. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து எடுத்தது ஏன்?

17. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவி தன் வாரிசுகளுக்கு வாங்குவதற்கு தவிர நீங்கள் டெல்லி சென்றது எத்தனை முறை? எதற்காக?

18. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம் போன்றவற்றிற்கு ஓடோடி செல்லும் நீங்கள் , எத்தனை முறை இறந்து போன மீனவர் குடும்பங்களுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறீர்கள்?

19. பல வருடங்களாக கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களை விட, தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி ?

20. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் , மணல் கொள்ளை, திரைப்படத்துறை முழுமையான ஆக்ரமிப்புக்கும் உள்ள தொடர்புகளை உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா?இருவருக்கும்:

1. விவசாயம் லாபமில்லா தொழிலாக போய்விட்டது. தனியார் தரிசு நிலங்கள் அதிகரித்து வருகின்றன. அவை சில காலம் கழித்து பிளாட்டுகளாக மாறி வருகின்றன. விவசாய கூலியும், இடுபொருட்கள் செலவும் அதிகரித்துவிட்டது. விவசாய விளைபொருட்களின் விலையை விவசாயி தீர்மானிக்க முடியவில்லை. பதுக்கல் வியாபாரிகளே அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள்?

2. முன்பெல்லாம் உள்கட்டமைப்பு மூலதன செலவுகளுக்கு பட்ஜெட்டிலிருந்து பணம் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது உலக வங்கியிலிருந்தும், நபார்டிலிருந்தும் கடன் வாங்கும் வழக்கம் வந்துவிட்டது. இது ஒரு நல்ல போக்கா?

3. பத்திர பதிவு துறை, போக்குவரத்து துறை, காவல் துறை, பொது பணித்துறை இந்த நான்கு துறைகளில்தான் அதிகம் லஞ்சம் புழங்குகிறது. இதை கனிசமாக குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?

4. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் ?

5. சட்டமன்றத்தில் ஜால்ரா பேச்சுகளை அடியோடு ஒழித்துவிட்டு அசல் பிரச்சினைகளைப் பற்றி ஆழமான விவாதங்களை நடக்கச் செய்யாமல் உங்கள் கட்சியினரைக் கெடுத்து வைத்திருப்பதை எப்போது மாற்றுவீர்கள் /

6. தலைமையை வைத்துத்தான் தொண்டர்கள் இருப்பார்கள். அப்பழுக்கற்ற அரசியல்வாதி, கண்ணியமான அரசியல்வாதி என்ற நற்பெயரை சம்பாதிக்க ஏன் இதுவரை முயற்சிக்க வில்லை?

7. ஆயிரக்கணக்கான குடும்பங்களை அரசு மதுக்கடைகள் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி உங்களுக்கு அக்கறையே கிடையாதா?

8. இவ்வளவு தவறையும் பண்ணிட்டு மறுபடியும் மறுபடியும் மக்கள் முன்னாடி வந்து நிக்கிறதுக்கு
உங்களுக்கு வெட்கமாவே இருக்காதா?

Thursday, April 7, 2011

Issued in Public Interest


அண்ணா ஹஸாரே

விளையாட்டு முதல் விஞ்ஞானம் வரை ஊழல் தலைவிரி கோலமாக ஆடும் தேசமாக பாரதம் மாறி வருகிறது. ஊழலுக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பிலிருக்கும் அரசாங்கமும், அதன் தலைமையும், அது பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது என அப்பாவி வேஷம் போட்டு வருகிறது. ஆனால் மேடைகள் தோறும், ஊழலை ஒழித்தாலொழிய எங்கள் அரசாங்கத்தின் ஜென்மம் சாபல்யம் பெறாது என்ற ரீதியில் அரசாங்கத்தை ஆட்டுவிப்பவர்கள் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் முதுபெறும் சமூக சேவகரான அன்னா ஹஸாரே, ஜன் லோக்பால் என்ற ஊழலுக்கெதிரான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென தில்லியின் ஜந்தர் மந்தரில் சாகும்வரை உண்ணா நோன்பு துவங்கியுள்ளார். இதற்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி, சீர்திருத்தவாதியான ஸ்வாமி அக்னிவேஷ் மற்றும் மகஸேசே விருது பெற்ற சந்தீப் பாண்டே போன்றோர்கள் ஆதரவளித்து, உண்ணா நோன்பில் பங்கேற்றுள்ளனர். மேலும் பொதுமக்களுடைய பெருவாரியான ஆதரவும், மீடியா கவனமும் பெற்று இந்த உண்ணா விரதம் அரசாங்கத்தின் கவனத்தைக் கலைத்துள்ளது.ஜன் லோக்பால்:

ஜன் லோக்பால் என்ற இந்த மசோதாவின் சூத்ரதாரி கர்நாடகத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுவரும் லோகாயுக்தா அமைப்பின் நிறுவனரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ப்ரசாந்த் பூஷன் போன்றோர் ஆவர். இம்மசோதாவின் நோக்கம், ஜன் லோக்பால் அமைப்பின் மூலம் ஊழல் புகார்களை உடனுக்குடன் (ஒரு வருடத்தில்) விசாரித்து முடித்து, சம்பத்தப்பட்ட நபருக்கு தண்டனை வாங்கித் தருவது, ஊழலின் மூலம் ஈட்டிய சொத்துக்களை முடக்குவது, போன்றவை ஆகும். தவிர, ஊழலில் ஈடுபட்டவர் மந்திரியாகவோ அல்லது முக்கிய அரசாங்க அதிகாரியாகவோ இருப்பின், அவர் மீது வழக்குத் தொடர அரசாங்க அனுமதி தேவையில்லை என்பதுவும் இம்மசோதாவின் முக்கிய அம்சமாகும். இம்மசோதாவை பாராளுமன்றத்தில் ஏற்று நிறைவேற்ற வேண்டுமென்பதுதான் இப்போதைய அன்னா ஹஸாரே தலைமையிலான உண்ணா நோன்பிருப்பவர்களின் முக்கியக் கோரிக்கை.

ஊழலுக்கெதிராகப் பிறப்பெடுத்துள்ள தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் ஏற்கனவே ஊழலை ஒழிக்க லோக்பால் என்ற மசோதாவை பாராளுமன்றத்தில் கொணர்ந்து நிறைவேற்றியும் உள்ளது. ஆனால் அதிலுள்ள ஓட்டைகளின் காரணமாக அது செயல்படுத்த முடியாத ஒரு சட்டம் என்பது அதை எதிர்க்கும் ஹஸாரே போன்றோர் கூறும் காரணம்.

அரசாங்கத்தில் லோக்பால் மசோதா மூலம் ஒரு மந்திரியோ அல்லது அரசாங்க அதிகாரி தொடர்புடைய ஊழலையோ வெளிக் கொணர்ந்து, விசாரித்து தண்டனை பெற்றுத் தர வேண்டுமானால், பொதுமக்கள் முதலில் லோக்சபா அல்லது ராஜ்யசபாவின் சபாநாயகரிடம் ஊழல் தொடர்பான புகார் மனுவை அளிக்க வேண்டும். சபாநாயகர் அம்மனுவைப் பரிசீலித்து, அது ஏற்புடையது என்றால் லோக்பால் கமிட்டிக்கு அனுப்புவார். பின்பு அது விசாரிக்கப்பட்டு, தண்டனையளிக்கப்படும்(???). இயல்பாகவே சபாநாயகர் ஆளுங்கட்சியையோ அல்லது கூட்டணியையோ சார்ந்த நபராக இருப்பதால், ஆளுங்கட்சி அல்லது அதற்கு வேண்டிய அதிகாரி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு சபாநாயகர் எடுத்துக் கொள்வது சந்தேகமே. அதற்கு மீறி கமிட்டிக்கு அனுப்பப்பட்டாலும் விசாரணை ஆண்டுகள் கணக்கில் எடுத்து, மறக்கப்பட்டு, பொதுமக்களின் பணமும் விசாரணை என்ற பெயரால் வீணடிக்கப்படும். எனவே அந்த லோக்பால் சட்டம் ஏற்புடையதல்ல என்பதே ஹஸாரே மற்றும் குழுவினரின் வாதம்.

ஜன் லோக்பால் மசோதாவின் அம்சங்கள்:

* மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், ஒவ்வொரு மாநிலத்திலும் லோகாயுக்தா அமைப்பும் நிறுவப்படும்.

* உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்று இவ்வமைப்பும் சுதந்திரமான அமைப்பாகும். இதன் விசாரணையில் அரசாங்கமோ அல்லது அதிகாரிகளின் குறுக்கீடோ இருக்காது.

* மற்ற வழக்குகள் போல் பல மாமாங்கங்களாக விசாரணை நடைபெறாமல், ஜன் லோக்பால் அமைப்பின் மூலம் எந்தவொரு வழக்கு விசாரணையும் ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டு, அடுத்த ஓராண்டில் வழக்கும் முடிக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய நபருக்கு தண்டனையும் அளிக்கப்பட்டு விடும்.

* ஊழல் மூலம் ஈட்டப்பட்ட, அரசாங்கத்திற்கு நட்டமேற்படுத்தப்பட்ட தொகை தண்டனைக்காலத்தில் மீட்கப்படும்.

* பொது மக்களுக்கு எந்தவொரு அரசாங்க அலுவலகத்தில் குறிப்பிட்ட பணி முடித்துக் கொடுக்கப்படா விட்டாலோ அல்லது தாமதப்படுத்தப்பட்டாலோ, தொடர்புடைய அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவ்வபராதம் மனுதாரருக்கு நிவாரணமாக அளிக்கப்படும்.

* ஆக உங்களுடைய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை பெறுவதில் மெத்தனமோ, தாமதமோ ஏற்படுத்தப்பட்டாலோ, நீங்கள் இவ்வமைப்பை அணுகலாம். இதன் மூலம் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு அது கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நிவாரணமும் பெற்றுத் தரப்படும். தவிர தரமற்ற சாலைகள், பஞ்சாயத்து அளவில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் போன்றவற்றையும் நீங்கள் இவ்வமைப்பின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம். இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய குற்றவாளி தண்டனை பெறுவார்.

* லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் அரசாங்கம் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள். நீதிபதிகள், பொதுமக்கள் போன்றவர்கள் மூலம் மிகவும் வெளிப்படையான நியமனம் இருக்கும். ஆகவே ஊழல் பேர்வழிகளே ஊழலை ஒழிக்கப் புறப்படும் அவலங்கள் தவிர்க்கப்படும்.

* ஜன் லோக்பால் உறுப்பினர்களே ஊழல்வாதிகளாக இருப்பின், அவர்கள் மீதான புகார்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்படுவர்.

* புகார் அளிப்பவர்கள் மற்றும் புகாரில் தொடர்புடையவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

மேற்கண்ட எந்தவொரு அம்சமும் அரசாங்கத்தின் தற்போதைய லோக்பால் மசோதாவில் இல்லை. இது போன்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கொண்ட நோக்கில் பழுதின்றி செயல்பட்டால், நிச்சயம் இந்தியா ஊழலற்ற தேசமாக மாறும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. தவிர, லோகாயுக்தா அமைப்பு கர்நாடக அமைச்சர்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டுவதால், இவ்வமைப்பு நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்து என்பதிலும் ஐயமில்லை. ஆக இந்தியர்கள் உலகக் கோப்பை வெற்றியை ஒற்றுமையோடு வரவேற்றுக் கொண்டாடியதைப் போல், ஹஸாரேவின் உண்ணா நோன்பிற்கும் ஆதரவளித்து, அவரது உயர்ந்த நோக்கம் ஈடேற ஆதரவளிப்போம்.
லோக்பால் பற்றி யாரும் அவ்வளவாக பேசுவதில்லை. பேசாமல் லோக்பால் என்பதை கிரிக்கெட் பால் என்று வைத்தால் பலரும் பேசுவார்கள் என்று நம்புகிறேன். அண்ணா ஹஸாரே முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். வெற்று பெற்றால் இவர் தான் பாரத ரத்தனா!

அடுத்த காந்தி


அண்ணா ஹஸாரேவின் ஊழலுக்கெதிரான உண்ணா விரதப் போராட்டம், இதை எழுதும் தறுவாயில் மூன்றாவது நாளை எட்டிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சி அமைப்புகள், இன்ன பிற சமூக அமைப்புகளின் ஆதரவு, என பல தரப்பிலிருந்தும் அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கெதிரான முன்னெடுப்பிற்கு ஆதரவு பல்கிப் பெருகிக் கொண்டிருப்பது மத்திய சர்க்காரை ஒருவித அச்சத்திற்காட்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டின் நல்லதேதும் நடக்கப் பொருக்காத காங்கிரஸ் அன்னா ஹஸாரேவின் உண்ணா விரதத்திற்குப் பின்னால் பாஜக இருப்பதாகவும், அன்னா ஹஸாரே ஒரு ஆர் எஸ் எஸ் கைக்கூலி என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த ஒரு வரிக்காகவே ஆர் எஸ் எஸ் அமைப்பு அதன் ஆயுட்காலம் முழுவதும் காங்கிரஸிற்கு கடமைப் பட்டுள்ளது. இவ்வாறு ஹஸாரெவைச் சாடியதன் மூலம், ஆர் எஸ் எஸ் அமைப்பு ஊழலுக்கெதிரான ஒரு அமைப்பு என்பதை காங்கிரஸ் மறைமுகமாக, அறிந்தோ அறியாமலோ ஒப்புக் கொண்டுள்ளது. இந்த வெற்று அரசியல் ஒருபுறம் இருக்கட்டும்.


இரண்டாம் நாளாக உண்ணா நோன்பு தொடரும் நிலையில், அன்னா ஹஸாரே, சுருக்கமாகவும், நறுக்குத் தெறித்தாற் போலும், பிரதமர் மன்மோஹன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் சாரம்..

"ஊழலைக் களைவதற்குண்டான முயற்சிகளை விடுத்து, இந்த அரசாங்கம் எங்களது நோக்கத்திலும், அமைப்பிலும் பழுது காண்பது வருத்தமளிக்கிறது. நான் உண்ணா நோன்பிறுப்பதற்காக வற்புறுத்தப்பட்டேன் என்று சில தரப்பிலிருந்து கேள்விப் படுவது என்னையும், எனது அறிவையும் அவமதிப்பது போன்றதாக இருக்கிறது.நம்மிடம் மொத்தம் எட்டு வகையான லோக்பால் மசோதாக்கள் இருக்கின்றன. ஆனால் பிரதமராகிய நீங்கள் இதில் ஒன்றைக் கூட அமல்படுத்த முனையவில்லை. தயவு செய்து தேசத்தைத் தவறான பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் (அரசாங்கம்) இதற்கான சில முன்னெடுப்பகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் இதற்கான சட்டவடிவுகளை வடிவமைப்போரில் பெரும்பாலானோர் சிறையில் இருக்க வேண்டியவர்கள். இவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை நம்ப வேண்டுமென்று நினைக்கிறீர்களா? என்னுடைய சூழலில் நீங்கள் இருந்தால், நீங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை நம்புவீர்களா?

நான் ஒன்றும் குழந்தையல்ல, எனவே என்னுடைய அறிவின் விஸ்தீரணத்தை சந்தேகிக்க வேண்டாம். என்னுடைய முடிவுகள் அனைத்துமே சுயமானவை. என்னுடைய முந்தைய மூன்று கடிதங்களுக்கு சோனியாவிடமிருந்தோ அல்லது பிரதமரிடமிருந்தோ எவ்விதமான பதிலும் இல்லை. அதனாலேயே சாகும் வரை உண்ணா விரதம் என்ற முடிவிற்கு வர வேண்டியிருந்தது., என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
( முழு கடிதம் கீழே )

இவ்வாறு இந்த ஊழலுக்கெதிரான போராட்டத்திற்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் இப்போராட்டத்தை எவ்வாறு முடக்கி மூட்டை கட்டலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறது. வீரப்ப மொய்லி கூறுகையில், ஹஸாரேவின் சில யோசனைகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். காங்கிரஸின் மழுப்பல் நாயகன் கபில் சிபல்(2G, CWG ஊழலே நடக்கவில்லை என்று சொன்னவர்), அன்னா ஹஸாரேவின் லோக்பால் மசோதாவிற்கு பற்களே இல்லை என்கிறார். டெண்டிஸ்டாகப் போயிருக்க வேண்டியவர். ஊழலை ஓழிப்போம் என்று சொல்வதற்கு இவர்களுக்கு முதலில் வாயே கிடையாது, பிறகு என்ன பற்களைப் பற்றிய பேச்சு?

ஊழலுக்கெதிரான அமைச்சர்கள் குழுவில் மத்திய அமைச்சர் ஷரத் பவார் இடம்பெற்றிருப்பதை ஹஸாரே விமர்சித்ததைத் தொடர்ந்து, ஷரத் பவார் அப்பொறுப்பிலிருந்து விலகவிருப்பதாகத் தெரிகிறது. தவிர, ஹஸாரேவே ஊழல் புகார்களுக்காட்பட்டிருப்பவர் என்று வேறு தேசியவாத காங்கிரஸ் பதிலடியாக விமர்சித்துள்ளது.

எது எப்படியோ, ஊழலுக்கெதிராக ஒரு மசோதாவை நிறைவேற்றி, காங்கிரஸ் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள முனையாது என்றே தோன்றுகிறது. ஆனாலும் ஹஸாரேவிற்கு வலுக்கும் ஆதரவு, அசைக்க முடியாத அம்மிக்கல்லை ஆடிக் காற்று நகர்த்தியது போல, ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் உண்டு.

அன்னா ஹஸாரேவிற்க்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு அவரை சந்திக்க முயன்ற உமா பாரதி மற்றும் ஓம் பிரகாஷ் செளதாலா போன்றோர், ஹஸாரேவின் ஆதரவாளர்களால திருப்பியனுப்பப்பட்டனர். அரசியல்வாதிகளின் நிழல் பட்டாலே மக்கள் திசை திரும்பி, கொண்ட நோக்கிலிருந்து மாறிவிடுவர் என்பது ஹஸாரேவின் ஆதரவாளர்கள் இதற்கு விளக்கமளித்துள்ளனர். நல்ல முன்னேற்றம் !

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மமே வெல்லும் எனும் கீதாசாரத்திற்கிணங்க, ஹஸாரேவின் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து அவருக்கு நமது நல்லாதரவை நல்குவோமாக.

- ஸ்ரீவத்ஸன்
[ Dear Dr. Singh,

I have started my indefinite fast at Jantar mantar. I had invited you also to fast and pray for a corruption free India on 5th April. Though I did not receive any reply from you, I am hopeful that you must have done that.

I am pained to read and hear about government's reaction to my fast. I consider it my duty to clarify the points raised on behalf of Congress party and the government by their spokespersons, as they appear in media:

1. It is being alleged that I am being instigated by some people to sit on this fast. Dear Manmohan Singh ji, this is an insult to my sense of wisdom and intelligence. I am not a kid that I could be "instigated" into going on an indefinite fast. I am a fiercely independent person. I take advice from many friends and critics, but do what my conscience directs me to do. It is my experience that when cornered, governments resort to such malicious slandering. I am pained that the government, rather than addressing the issue of corruption, is trying to allege conspiracies, when there are none.

2. It is being said that I have shown impatience. Dear Prime Minister, so far, every government has shown complete insensitivity and lack of political commitment to tackling corruption. 62 years after independence, we still do not have independent and effective anti‐corruption systems. Very weak versions of Lokpal Bill were presented in Parliament eight times in last 42 years. Even these weak versions were not passed by Parliament. This means, left to themselves, the politicians and bureaucrats will never pass any law which subjects them to any kind of objective scrutiny. At a time, when the country has witnessed scams of unprecedented scale, the impatience of the entire country is justified. And we call upon you, not to look for precedents, but show courage to take unprecedented steps.

3. It is being said that I have shown impatience when the government has "initiated" the process. I would urge you to tell me - exactly what processes are underway?

a. You say that your Group of Ministers are drafting the anti‐corruption law. Many of the members of this Group of Ministers have such a shady past that if effective anticorruption systems had been in place, some of them would have been behind bars. Do you want us to have faith in a process in which some of the most corrupt people of this country should draft the anti‐corruption law?

b. NAC sub‐committee has discussed Jan Lokpal Bill. But what does that actually mean? Will the government accept the recommendations of NAC sub‐committee? So far, UPA II has shown complete contempt for even the most innocuous issues raised by NAC.

c. I and many other friends from India Against Corruption movement wrote several letters to you after 1st December. I also sent you a copy of Jan Lokpal Bill on 1st December. We did not get any response. It is only when I wrote to you that I will sit on an indefinite fast, we were promptly invited for discussions on 7th March. I wonder whether the government responds only to threats of indefinite fast. Before that, representatives of India Against Corruption had been meeting various Ministers seeking their support for the Jan Lokpal Bill. They met Mr Moily also and personally handed over copy of Jan Lokpal to him. A few hours before our meeting with you, we received a phone call from Mr Moily's office that the copy of Jan Lokpal Bill had been misplaced by his office and they wanted another copy. This is the seriousness with which the government has dealt with Jan Lokpal Bill.

d. Dear Dr Manmohan Singh ji, if you were in my place, would you have any faith in the aforesaid processes? Kindly let me know if there are any other processes underway. If you still feel that I am impatient, I am happy that I am because the whole nation is feeling impatient at the lack of credible efforts from your government against corruption.

4. What are we asking for? We are not saying that you should accept the Bill drafted by us. But kindly create a credible platform for discussions - a joint committee with at least half members from civil society suggested by us. Your spokespersons are misleading the nation when they say that there is no precedent for setting up a joint committee. At least seven laws in Maharashtra were drafted by similar joint committees and presented in Maharashtra Assembly. Maharashtra RTI Act, one of the best laws of those times, was drafted by a joint committee. Even at the centre, when 25,000 tribals came to Delhi two years ago, your government set up a joint committee on land issues within 48 hours. You yourself are the Chairperson of that committee.

This means that the government is willing to set up joint committees on all other issues, but not on corruption. Why?

5. It is being said that the government wants to talk to us and we are not talking to them. This is utterly false. Tell me a single meeting when you called us and we did not come. We strongly believe in dialogue and engagement. Kindly do not mislead the country by saying that we are shunning dialogue.

We request you to take some credible steps at stemming corruption. Kindly stop finding faults and suspecting conspiracies in our movement. There are none. Even if there were, it does not absolve you of your responsibilities to stop corruption.

With warm regards,
K B Hazare

தொடர்ந்து இட்லிவடையில் அண்ணா ஹஸாரே பற்றி செய்திகள் வரும். இவர் நமக்காக செய்கிறார் நிச்சயம் ஆதரவு கொடுக்க வேண்டும்.

Wednesday, April 6, 2011


வடிவேலு, விஜயகாந்தை தண்ணி வண்டி என்று விமர்சிப்பது இருக்கட்டும். விஜயகாந்த் தான்போகும் பிரச்சார கூட்டங்களில் எல்லாம், டாக்டர் ராமதாசையும்,பாமகவையும் "அதிமுகவின் வடிவேலு" ரேஞ்சுக்கு விமர்சித்து வருகிறார்.

" சமூக நீதி காத்த போராளி (ராமதாஸ்) என்கிறார்களே, அவர் அப்படி எந்த சமூகத்தைக் காத்தார்?. எந்த சமூகத்தை அவர் காத்தார் என்பதை அறிய நான் விரும்புகிறேன்.

நீங்கள் காத்த சமுதாயம் எது என்பது மக்களுக்குத் தெரியாதா?. அவரது கூட்டணித் தலைவர் கருணாநிதி பாணியில் சொல்வதானால், இரு ஆடுகளை முட்ட விட்டு அதில் ரத்தம் குடிக்கும் ஓநாய் போன்றவர்தான் இவர்.

இரு ஜாதிகளை மோத விட்டு, அதில் ரத்தம் குடித்தவர்தான் இவர். இவர் என்னைப் பார்த்து சிறைக்குப் போனாயா என்கிறார். நீங்கள் எதற்காக சிறைக்குப் போனீர்கள். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க சிறைக்குப் போனீர்களா?. பஸ்களை எரித்து சிறைக்குப் போனீர்கள். சமூகத்தை மோத விட்டு சிறைக்குப் போனீர்கள். இது பெருமையா?."

என்று விமர்சித்து இருக்கிறார்.

"பாமகவினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி நாசமாக்கிவிட்டனர். இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி மரம் நடச் சொல்கின்றனர்.இதேபோன்று மதுவை ஒழிப்போம், டாஸ்மாக் கடைகளை விரட்டுவோம் என அன்று வீராப்புடன் முழங்கியவர்கள் இன்று டாஸ்மாக் கடைகளை நடத்தும் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது."

இவ்வாறு ராமதாசை ஓநாய், குரங்கு என்கிற பாணியில் விமர்சித்து வருகிறார் விஜயகாந்த்.

முன்பு, தனியாக நின்றபோது ஜெயலலிதா,கருணாநிதி என்று இருவரையும் பாரபட்சமின்றி விமர்சித்தார் விஜயகாந்த். தற்சமயம், அதிமுக கூட்டணியில் இருப்பதால், டாக்டரையும், கருணாநிதியையும் பிடித்து கொண்டு இருக்கிறார்.

இன்று தேர்தல் பிரச்சாரம் செய்பவர்கள் யாரிடமும் நல்ல செயல்திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை. அந்த அந்த ஊருக்கு தக்கவாறு வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள். தேர்தலுக்கு பின் இதையெல்லாம் யார் நினைவில் வைத்து இருக்க போகிறார்கள் என்ற கணக்கில், ஊருக்கு ஒரு வாக்குறுதிகளை வீசி வருகிறார்கள் திமுக மற்றும் அதிமுக தலைவர்களும்.

வைகோ போன்று நன்றாக பிரச்சாரம் செய்பவர்கள் இன்று இரண்டு கூட்டணியிலும் இல்லை. இன்றைய அரசியல் டிரண்ட் படி, அரசியல் கட்சி பேச்சாளர்களுக்கு இரண்டே தகுதிகள்தான். ஒன்று, தனிப்பட்டமுறையில் எதிராளியை தாக்கி பேசவேண்டும். இரண்டு, ஆபாசமாக இரட்டை அரத்ததோடு கண்டிப்பாக பேச தெரிந்து இருக்க வேண்டும்.விந்தியா,குஷ்பூ போன்ற கவர்ச்சி நடிகைகளையும், வடிவேலு போன்ற நடிகர்களையும் நம்பியே பிரச்சாரத்தில் இருக்கின்றன இன்றைய கட்சிகள்.

ஆனால், விஜயகாந்த் மட்டும் வாய் ஓயாது குறை சொல்லிவருகிறார். முறையான செயல்திட்டங்களோ ஏன் சினிமாவில் அவர் பேசும் புள்ளிவிவரங்கள் கூட அவர் பிரச்சாரத்தில் இல்லை.வடிவேலு சொல்வது ஒரு விதத்தில் உண்மையே. விஜயகாந்துக்கு எப்படி பேசவேண்டும், பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அரசியல் அடிப்படைகள் கூட தெரியவில்லையே.

"தருமபுரியில் நான் வேட்பாளரை அடித்ததாக சில தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிட்டுள்ளனர். அது தவறானது. ஒருவேளை அப்படியே நான் அடித்திருந்தாலும், என்னுடைய கட்சி ஆளைத்தானே அடித்தேன். என்னைப் பற்றி என் கட்சிக்காரர்களுக்கு தெரியும். என் கையில் அடி வாங்குகிறவன் நாளை மகாராஜா ஆவான்' என்றார்.
முன்பு ஒரு முறை,திருச்சியில் ஒரு படபிடிப்புக்காக சென்றபோது, தனது கார் டிரைவரை பொதுமக்கள் முன்பாக கன்னத்தில் அறைந்தார் விஜயகாந்த்.

தர்மபுரியில் நடந்த ஒரு பிரச்சார கூட்டத்தில், தனது வேட்பாளர் பெயரே தெரியாமல் தவறான பெயரை சொல்லி பிரச்சாரம் செய்ய, அதை சுட்டிகாட்டிய வேட்பாளரை 'பப்ளிக்காக' குனியவைத்து, முதுகில் சாத்தி இருக்கிறார் விஜயகாந்த். எந்த அளவுக்கு அவர் பக்குவமோ அறிவோ இல்லாமல் இருக்கிறார் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

இது குறித்து தர்மபுரி தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கர் கூறியதாவது, "தர்மபுரியில் விஜயகாந்த் பிரசாரம் செய்தபோது அவர் வைத்திருந்த மைக்கின் பேட்டரி கழன்று கீழே விழுந்தது. அதை எடுத்துக் கொடுக்குமாறு தனது உதவியாளரை கேட்டார். அவரும் எடுத்துக் கொடுத்தார். பின்னர் மீண்டும் கீழே விழுந்தபோதும் எடுத்துக் கொடுத்தார்.

பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார். ஆனால் என்னை அடித்துவிட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் தான் அமர்ந்திருந்தோம்.

விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி. நான் வெற்றி பெறக் கூடாது என்று இது போன்ற பொய்யான பிரசாரம் செய்கின்றனர்" என்றார்.

அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு முதல் காரணமான 'துக்ளக்' ஆசிரியர் சோ அவர்கள்,

"எனக்கென்னமோ இது ஒரு பெரிய விஷயமாவே படல. வேட்பாளரை அடிப்பதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா... அவரு ஏதோ வேகத்துல அடிச்சிருப்பார். அவங்க கட்சி ஆள்தானே... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. ஜனங்க இதை சீரியஸாகவும் எடுத்துக்க மாட்டாங்க" - என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.

"நீ அடிச்சா மகாராஜா ஆகிடுவாங்கன்னு சொல்றியே, பேசாம உன்னோட கல்யாண மண்டபத்து உன் கட்சிக்காரங்கள வரிசையில நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து நங்கு நங்குன்னு குத்தி, எல்லோரையும் மகாராஜா ஆக்க வேண்டியதுதானே. அதுக்கு எதுக்குடா எலக்ஷன். பொது இடத்துல வச்சு நாலு பேரு பாக்கற மாதிரி நங்கு நங்குன்னு குத்துறான். இதை இந்த தேர்தல் அதிகாரிங்க பார்த்துக்கிட்டு என்ன செய்றாங்க. அந்தாளை கைது செய்ய வேண்டாமா."

என்று வழக்கமாக தாக்கி இருக்கிறார் திமுகவின் "பிரச்சார பீரங்கி" வடிவேலு.

விஜயகாந்தின் நடவடிக்கைகளை பார்த்தால், வடிவேலு சொல்வது ஓரளவுக்கு நியாயமாகவே படுகிறது.

பக்குவமோ பொறுப்போ கொஞ்சம் கூட இல்லாத விஜயகாந்தின் சினிமா கவர்ச்சிக்கு வரும் கூட்டத்தை நம்பி ஏமாந்துவிட்டார் ஜெயலலிதா என்று தோன்றுகிறது.

(நன்றி, இனி, அடுத்த வாரம்)

-இன்பா

தேர்தல் 2011 - யாருக்கு வாய்ப்பு ?


பலகாலமாக நகர்ப்புறத்தில் படித்த ஆண்கள் திமுகவிற்கும், கிராமப்புற தலித் பெண்மணிகள் பெரும்பாலும் அதிமுகவிற்குமாக வாக்களித்து வந்தனர். ஆனால் இனி நிலைமை அப்படி இருக்காது என்று சொல்லுகிறார்க்ள். திமுகவும் இம்முறை தனது பாரம்பரிய நகர்ப்புற ஓட்டுவங்கியை விட்டு அவசர அவசரமாக வெளியேற முடிவு செய்திருக்கிறது. காரணம் நகர்ப்புற படித்த வர்க்கத்தினரிடையே 2G ஊழல் தொடர்பாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சி தொடர்பான கவலைதான். இந்த முறை கர்ண பரம்பரை போல் நகரிலுள்ள 16 தொகுதிகளில் 5 தொகுதிகளை மிகவும் எளிதாக கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு தாரை வார்த்து விட்டது. இவ்வாறு நகர்ப்புற தொகுதிகளை விட்டு ஓட்டம் பிடித்ததில் முன்னோடியாக திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியே அங்கம் வகிக்கிறார். 1967 லிருந்து, நகர்ப்புறத்தை விட்டு வெளியே செல்வது கருணாநிதிக்கு இதுவே முதன்முறை.இதற்கு அதிகாரப்பூர்வமாக சொல்லப்படும் காரணம், கருணாநிதி தனது சொந்த ஊர் தொகுதியிலிருந்து போட்டியிட விரும்புகிறார் என்பது, இந்த வாதத்தை திமுக தொண்டனே ஏற்றுக்கொள்ள மாட்டான். 2G ஊழல் தொடர்பான விழிப்புணர்ச்சி சென்னை நகர மக்களிடையே அதிகமாக இருப்பதால், திமுகவின் முன்னணித் தலைவர்கள் எவரும் அங்கு போட்டியிடத் துணியவில்லை என்பது தான் நிஜம். காங்கிரஸ் கட்சியானது, திருவிக நகர், ராயபுரம், மைலாப்பூர், தி.நகர் மற்றும் அண்ணா நகர் தொகுதிகளில் தனது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. திமுக தலைவரின் மகனும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினும் தனது விருப்பத் தொகுதியும், தொடர்ந்து மும்முறை வெற்றி பெற்ற ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டு, சென்னையின் எல்லைப்புறத் தொகுதியான கொளத்தூருக்கு இடம் பெயர்ந்துள்ளார். 2006 தேர்தல்களில் நேரெதிரிடையாக திமுக 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டது. சென்ற தேர்தலிலேயே நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் அதிமுகவிற்கு செல்வாக்கு கிட்டியது வெளிப்படையாகத் தெரிந்ததே இம்மாற்றத்திற்குக் காரணம் என்கிறார் ஸ்டாலினின் முந்தைய ஆயிரம் விளக்கு தொகுதியில் 2001 தேர்தலில் 70 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2006 தேர்தலில் அவர் பெற்ற வாக்கு சதவிகிதம் 46 ஆகக் குறைந்தது. மற்றொரு உதாரணம் துறைமுகம் தொகுதி. இதை திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமான அன்பழகன் தனக்கு சொந்தமாகவே மாற்றியிருந்தார். 1996 இல் 70 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்ற இவர், 2006 இல் பெற்ற வாக்கு சதவிகிதம் 44. திமுகவின் மற்றொரு கோட்டையான திருவல்லிக்கேணியில் 2006 தேர்தலில் அதிமுகவின் ஃபதர் சயீத், திமுகவின் நாகநாதனை அதிர்ச்சித் தோல்விக்குள்ளாக்கினார். இவர் திமுகவின் அன்றைய தேர்தல் அறிக்கையின் சிற்பி என்று அறியப்பட்டவர். சான்ஸ் கொடுத்தால் திமுக தலைவர்கள் ஆந்திரா, கர்நாடகா எல்லையில் கூட நிற்பார்கள்.

இந்த முறை கருத்து கணிப்பு என்ன சொல்லுகிறது என்று பார்க்கலாம்.


லயோலா கல்லூரி கருத்து கணிப்பு இவ்வாறு சொல்லுகிறது "5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்துடன் அ.தி.மு.க. அணிக்கு சாதகமாக 105 தொகுதிகள் வரை உள்ளன. தி.முக. அணிக்கு சாதகமாக 70 தொகுதிகள் வரையும், மீதமுள்ள 59 தொகுதிகளில் கடுமையான போட்டியும் நிலவுகிறது"