ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Tuesday, November 9, 2010

பிரபுதேவா நயன்தாரா ஜோடிக்கு, 'கலைஞர்' ஆதரவு?

சற்று ஓய்ந்திருக்கும் பிரபு தேவா, நயன்தாரா விவகாரம் மீண்டும் புகையலாம் போல் தெரிகிறது. முறையற்ற காதல் உறவு என விமர்சனங்களுக்கும், எதிர்ப்புக்களுக்கும்  உள்ளாக்கப்பட்டிருக்கும், பிரபுதேவா நயன்தாரா ஜோடியினை, ஆந்திர மாநிலத்தில் சிறந்த ஜோடியாக அறிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தியது ஆந்திரச் சினிமாப் பத்திரிகை.

அதே உத்தியை தற்போது தமிழகத்தில் கையாண்டிருக்கிறது கலைஞர் டி.வி. 'வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா..' என உணர்த்த முற்படுவது போல் சர்ச்சைக்குரிய இந்த ஜோடியை, தனது 'மானாட மயிலாட' நிகழ்சிக்கு சிறப்பு அதிதிகளாக அழைத்துப் பெருமைப்படுத்தி? இருப்பதாகத் தெரியவருகிறது.
சர்ச்சைக்குரிய இந்த ஜோடியுடன் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணனும், கலைஞர் டி.வியின் இயக்குனர் அமிர்தம் அவர்களும் இணைந்து மேடையில் தோன்றியிருந்த காட்சி நாளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடுவதன் மூலம் இந்த ஜோடிக்கான அங்கீகாரத்தை தமிழகத்தில் கலைஞர் டி.வி மூலம் உருவாக்கி தர முயல்கின்றார்கள் போலும். இந்நிகழ்ச்சி தமிழகத்தில் ஒளிப்பதிவு செய்யப்படாமல், அபுதாபியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதன் பின்புலமும் இது தானோ என்றும்  தோன்றுகிறது!?
தெலுங்குப் பத்திரிகை செய்தபோது கொதித்தெழுந்த தமிழக அமைப்புக்கள் இனி என்ன செய்யப் போகின்றன..?


இது இவ்வாறிருக்க தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில், அதிக வரவேற்பை பெற்ற 'மானாட மயிலாட' வின் சீசன் 5 இன் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும், அபுதாபி நேஷனல் தியேட்டரில் கடந்த 15 ம் திகதி நடைபெற்றது.



நடிகைகள் குஷ்பு, நமீதா நடன இயக்குனர் பிருந்தா, நிகழ்ச்சி இயக்குனர் கலா மாஷ்ட்டர், தொகுப்பாளர் சஞ்சீவ், கீர்த்தி ஆகியோருடன், போட்டியாளர்கள் பயஸ்-வர்ஷா, பாலா-ஷ்வேதா, ரஹ்மான்-ஷிவானி, கிரண்-லீலாவதி, அஜார்-ஜெனிபர் ஆகியோரும், தமிழ், கோகுல் ஆகியோர் பிரமாண்ட இறுதிப்போட்டியில் மேடையில் தோன்றி ஆடிப்பாடினர்.

இதனை நாளை (ஒக்.24) ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்ச்சியாக கலைஞர் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. இறுதிப்போட்டிக்கு ரஹ்மான்-ஷிவானி, கிரண் - லீலாவதி, பயாஷ் - வர்ஷா, பாலா - ஸ்வேதா ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர்.
      



ரசிகர்களின் எஸ்.எம்.எஸ் வாக்களிப்பின் படி வெற்றி பெற்றவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் முதல் பரிசு பல இலட்சம் பெறுமதியான வீடு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ஏற்கனவே ஒரு முறை டைட்டில் வின்னரான பாலா இம்முறையும் வெற்றி பெறலாம் என்பதை நிகழ்ச்சியின் போக்கு முன்கூட்டியே காட்டிவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். கலா மாஸ்ட்டருக்கு மிக வேண்டப்பட்டவரான சான்டியின் கொரியாகிராபியும் இதற்கு காரணம் என அத்தகவல்கள் கூறின.

முதற்பரிசை ரஷ்மான் - ஷிவானி ஜோடியே பெறுவதற்கு தகுதியானதென அநேக ரசிகர்கள் கருத்துக்கணிப்பில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தான் பரிசளிப்பு விழா அபுதாபியில் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
நேரடியாக பார்த்தவர்களுக்கு மாத்திரமே வென்றது யாரென தெரிந்திருந்த நிலையில், நாளைய மானாட மயிலாட தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

அபுதாபியில் அறிவிக்கப்பட்ட மானாட மயிலாச சீசன் 5 முடிவுகள்
முதற் பரிசு - பாலா - ஸ்வேதா.
இரண்டாம் பரிசு - ரஹ்மான் - ஷிவானி
மூன்றாம் பரிசு - கிரண் - லீலாவதி
நான்காம் பரிசு பயாஷ் - வர்ஷா

என நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டி முடிவுகளில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளன எனவும், பாலா ஏற்கனவே டைட்டில் வின்னராகியிருந்த போதும், தனி நபர்களின் செல்வாக்கினால் மீண்டும் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முடிவுகள் ஏமாற்றத்தையே தந்துள்ளதாக நிகழ்ச்சியை நேரிடையாக பார்த்த அபுதாபி ரசிகர்களும் கூறியிருக்கின்றனர். ஆனால் இது பேருக்குத்தான் ரியாலிட்டி ஷோ என அறிவிக்கப்படுகிறதே தவிர, மற்றும்படி எல்லா முடிவுகளும், நிகழ்ச்சி இயக்குனர், மற்றும் தொலைக்காட்சி சேவையினரின் முன் முடிவுகளே எனவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

இது அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கும் ஒரளவுக்குத் தெரிந்திருப்பதாகவும் பேசப்படுகிறது. அநேகமான தொலைக்காட்சி றியால்டி ஷோக்களில் இது நடைமுறையிலுள்ள ஒன்றே எனவும், இத்தகைய ஷோக்களில் வரும், அழுகை, சிரிப்பு, சண்டை, எல்லாம் ....செயற்கையாகச் செய்யப்பட்ட உண்மைகளே எனப்போட்டுடைக்கின்றார்கள் விடயமறிந்தவர்கள்.

என்ன கொடுமை சரவணா இது..?







இந்த மாதிரி  வாழ்கை வாழ்வது சரியா தவறா ?

No comments:

Post a Comment