ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Wednesday, April 6, 2011

மீண்டும் மீண்டும் வா! வேண்டும் வேண்டும் தா !


க்ருஷ்ண பாகவதர் இந்த பேரை அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறக்க முடியாது. அவருடைய லேட்டஸ்ட் சரக்கு .. 


இந்த தேர்தல் மிக வித்யாசமானது. கருணாநிதியையும் திமுகவையும் வடநாட்டு பத்திரிக்கைகளும், சில தமிழ் பத்திரிக்கைகளும், இ.வ போன்ற ப்ளாக்குகளும் 2G ஊழலை மையமாக வைத்து சாட்டையை சுழற்றிக்கொண்டிருக்கின்றன. நமது emotionகளை சற்று தள்ளி வைத்து ப்ராக்டிகலாக சிந்திக்கும் முயற்சியே இக்கட்டுரை.
மனிதன் எப்போது தோன்றினானோ அப்போதிலிருந்தே காமம், க்ரோதம், லோபம், மோஹம், ஊழல், exploitation எல்லாமே ஆரம்பித்து விட்டது. 



மகாபாரதக் காலத்திலிருந்தே மனித குலத்தில் இவை இருந்ததற்க்கான சான்றுகள் பல உள்ளன. ஒரு வடமொழி பாட்டின் படி
‘யஸ்யாஸ்தி வித்தம்
ஸ் நர: குலீன:
ஆ ஏவ வக்தா ஸ ச தர்சனீயா’
யாரிடம் பணம் இருக்கிறதோ அவன்தான் மனிதன். அவனே நல்ல குலத்தில் பிறந்தவன். அவனே படித்தவன், பண்பாளன், சிறந்த பேச்சாளன், எல்லோரும் பார்த்து வணங்கக் கூடியவன். எனவே அந்த செல்வத்தை எந்த வழியிலும் அடைய மனிதன் முயற்சி செய்வான். அதில் அரசியல்வாதிகள் முன்னணியில் எப்போதுமே நிற்கின்றனர்.
இந்த களைகளை எடுக்க எடுக்க மீண்டும் மீண்டும் அவை முளைத்துக் கொண்டே இருக்கும். முடிவே கிடையாது. இந்த தேர்தலில் நாம் களையெடுக்க முயற்சித்தால் தரிசு நிலம்தான் மிஞ்சும். ஏனென்றால் இப்போது எல்லா கட்சிகளும் அரசியல்வாதிகளும் களைதான். எதை பிடுங்குவது? எதை நீர் விட்டு வளர்ப்பது. இந்த நிலையில் எந்த களை நமக்கு உபயோகமாகமானது என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு வியாதியை தீர்க்க நாம் குடிக்கும் மருந்து இன்னொரு மாபெரும் வியாதியை தோற்றுவிக்கலாம். 



என்னமோ திமுக மட்டும்தான் ஊழல் செய்வது போலவும், ஜெ வந்தால் நாட்டில் தேனும் பாலும் பெருகும் என்பது போலவும் பல படித்தவர்களால் பேசப்படுகிறது. நாம் முன்பு பார்க்காத ஜெவின் ஆட்சியா? அவர் தலைகனத்துடன் ஆட்டமாக ஆடியதும் மன்னார்குடி மாஃபியா கும்பலுடன் ஊழலின் உச்சக்கட்டத்தை அடைந்ததும் மக்கள் மறந்து விட்டார்களா என்ன? The remedy for removing the current scandalous government may result in a much worst catastrophe.

பல வருடங்கள் தென்னாட்டு, மற்றும் வடநாட்டு கார்ப்பரேஷன்களில் உயர் அதிகாரியாய் பணி புரிந்ததில் நான் கண்ட உண்மைகளை எடுத்து சொல்ல விரும்புகிறேன். கருணாநிதி குடும்பத்தினர், டிவி, சினிமா மற்றும் பல தொழில்களை வளைத்துப் போட்டு விட்டதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் வலிமை அடைவதற்க்கு முன் 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் தொழில்கள் இருந்த நிலமை என்ன? மத்திய அரசாங்கத்தையும், ஊழல் காங்கிரஸ்காரர்களை கையில் போட்டுக் கொண்டும் வடநாட்டு தொழிலதிபர்கள் தமிழ்நாட்டை சுரண்டி வந்தனர். High Quality Productகளை நேர்மையோடும், நாணயத்தோடும் உற்பத்தி செய்து வந்த TVS, Ashok Leyland, மற்றும் திரு.சிவசைலத்தின் தொழில்களை வளரவிடாமல் செய்ததோடு அவற்றை நசுக்கியும் வந்தனர். Standard Motors மூடப்பட யார் காரணம்? TVS Suzuki நாட்டிலேயே உயர் நிலையை எட்டிக்கொண்டிருந்தபோது அதை அழிக்க அவர்கள் செய்த சூழ்ச்சி எத்தனை? ஸ்ட்ரைக்கை தூண்டுதல், supply chainஐ துண்டாடுதல், மத்திய அரசாங்கத்தின் மூலம் பல நெருக்கடிகள் என்று எத்தனை முயற்சிகள் செய்தார்கள்?
தமிழ்நாட்டில் Leyland அரசாங்க பேருந்துகளையே பார்த்திருந்த எனது கண்களுக்கு முதன் முறையாக பல வடநாடுகளுக்கு அலுவலில் 80களில் பயணிக்கும்போது எங்கு நோக்கினும் Tata Benzதான். KSRTC அலுவலர் ஒருவரிடம் ’ஏன் லேலண்ட் பஸ்ஸே இங்கு ஓடமாட்டெங்குது’ என்று கேட்டபோது ’அது ரொம்ப நல்ல வண்டிதான். ஆனா அரசாங்கத்துல TATA வண்டிகளை வாங்கச் சொல்லி உத்தரவு போடறாங்க. என்ன செய்யறது” என்றபோது TATA எப்படி எல்லா மாநிலங்களிலும் அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கியிருக்கிறது என்பது தெரிய வந்தது. சரி உள்ளூர் மார்க்கெட் கிடைக்கலேன்னா பரவாயில்லை என்று ஐரோப்பாவில் பெரும் ஆர்டர் பெற்று கண்ணியமாக பிழைப்பு நடத்தி வந்த லேலண்டை சும்மா விட்டர்களா வடநாட்டார்? Imports Exports policyகளை தவறாக உபயோகப்படுத்தி Production & Delivery களை நிறுத்துவது அல்லது தாமதப்படுத்துவது, யூனியனை தவறாக தூண்டி விடுவது என்று எத்தனை தில்லு முல்லுகள் செய்தார்கள். தரமான TVS கம்பெனி High end of Value Chain ஐ அடைந்தால் நாம் அதோகதிதான் என்று அஞ்சி ‘ ஏதோ ப்ரேக்கோ, ரேடியேட்டர் மூடியோ செஞ்சு பொழச்சுக்கோ! பெரிய லெவலுக்கு ஆசைப்படாதே!!’ என்று தமிழ்நாட்டு தொழில்களை முடக்கி போட்டது யார்? திமுகவா? இல்லை காங்கிரஸ்காரகளை கையில் வைத்துகொண்டு ஆட்டம் போட்ட வடநாட்டவர்களா?
TVS உலகதரம் வாய்ந்த Whirlpool உடன் கூட்டு சேர்ந்து பாண்டிச்சேரியில் தயாரித்த washing Machines கபகபவென விற்பனையில் முன்னேறுவது கண்டு துடித்துப் போய் Videocon போன்ற வடநாட்டு கம்பெனிகள் செய்த மோசடித்தனங்கள் கொஞ்சமா நஞ்சமா? ஒரு லாரி லோடுக்கு மட்டும் invoice செய்துவிட்டு அதே invoice வைத்து பத்து லாரி வாஷிங் மெஷின்களை excise ஓ மற்ற வரிகளோ செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றி பல வருடங்கள் கோடிக்கணக்கில் அல்லவா வரி ஏய்ப்பு செய்தார்கள். நல்ல வேளை மக்கள் தரமான மெஷின் என்று whirlpoolக்கு ஆதரவு அளித்ததால் அந்த கம்பெனி மூழ்காமல் தப்பித்தது. இதெல்லாம் Tip of the Icebergதான். தொழில் துறையில் இருப்பவர்களை கேட்டால் கதை கதையாக இன்னும் பல கம்பெனிகள் பற்றி சொல்வார்கள்.
’நீ என்னாடா டாடாவா பிர்லாவா?’ என்று மக்கள் மத்தியில் அவர்களை விட்டால் பெரிய பணக்காரர்களோ தொழிலதிபர்களோ இந்தியாவில் இப்பொதும் எப்போதும் கிடையாது என்று மக்களுடைய sub conscience ல் பதிந்துபோய் வடநாட்டு புகழ்பாடியாகவே பல decades இருந்தோர்களே தவிர நம்மவர்கள் இந்திய அளவில் வெற்றியடைய முடியாமல் தடுப்பது என்னது என்று யோசித்ததே இல்லை. அடுத்து வந்தார் அம்பானி!. அவர் செய்த தில்லு முல்லுக்களும், சட்ட மீறல்களும், வரி ஏய்ப்புகளும் ஏராளம்! ஏராளம்! இப்போதும் அம்பானி போல் உண்டா என்றுதான் தமிழர் புகழ்கிறார்களேயொழிய இவர் அயோக்கியர், அழுகுணி, தில்லுமுல்லு கேஸ் என்று யாராவது தென்னிந்தியர் அவரை வசை பாடினார்களா. திரூபாயின் புகழ்பாடி , அவர் தவறுகளை நியாயப்படுத்தி நம் தென்னிந்திய இயக்குனர் மணிரத்தினம் திரைப்படம் வேறு எடுத்தார்.
காங்கிரஸ் பெருச்சாளிகள் பலர் கோடிக்கணக்கில் ஊழல் செய்து, கையும் களவுமாக மூட்டை மூட்டையாக பணம் பிடி பட்டபோதும், அட இது இந்தியச் சொத்துடா என்று கவலைப்படாமல் ‘அட அவன் எங்கியோ டெல்லியில கொள்ளையடிச்சான், பீகாரிலே கொள்ளையடிச்சான்’ என்று அவனை ஹீரோ ரேஞ்சுக்கு பார்த்தனரே தவிர, நம் பத்திரிக்கைகள் அதைக் கண்டுகொண்டதா! இல்லை நம் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தை நிறுத்திக் காட்டினரா!. என்னமோ இந்த ஊழல் recordஐ அவர் வீழ்த்தினார், இவர் வீழ்த்தினார் என்று தனது statistics மேதாவித்தனத்தை காட்டிக் கொண்டனரே தவிர உருப்படியாக என்ன செய்தார்கள். அந்த பெருச்சாளிகள் இன்றும் சகல மரியாதைகளுடன், க்ஷேமமாய், இன்றும் கவர்மெண்ட் பாதுகாப்புடன் சொகுசு காரில் உலா வருகிறார்கள். ஆனால் இன்று என்ன நடக்கிறது? ஒரு தமிழன், ஒரு தமிழ் கட்சி ஊழல் செய்ததென்றால் பாராளுமன்றமே ஸ்தம்பிக்கிறது, பத்திரிக்கைகளும், மற்ற ஊடகங்களும் சாடித் தள்ளுகின்றன. இது வடநாட்டு ஏகாதிபத்தியம் இல்லாமல் வேறென்ன?



திமுகவினர் அயோக்கியர்கள், ஊழல் பெருச்சாளிகள், தில்லு முல்லு செய்து சாட்டிலைட், டிவி, கேபிள், சினிமா இவைகளை கைப்பற்றி விட்டனர் என்று சொல்பவர்கள், டாடா, பிர்லா, அம்பானி வளர்ந்த கதையை மறந்ததேனோ! முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும், அயோக்கியர்களை வெல்ல இன்னொரு அயோக்கியனால்தான் முடியும், ஒரு ரொளடியை மிஞ்ச இன்னொரு ரொளடிதான் தேவை. இவர்கள் இப்படி செய்யவில்லையென்றால் இன்று இந்த துறைகள் zee TV, Start Tv போன்ற வடநாட்டு கம்பெனிகளால் monopolyயாக்கப்பட்டு, தமிழ்நாட்டிலிருந்து மொத்த வருமானமும் வடநாட்டிற்க்கு முன்பு போலவே மூட்டை கட்டப்பட்டிருக்கும். வடநாட்டான் ஊழல் செய்தால் எங்கோ நடக்கிறது நமக்கென்ன என்றிருப்பவர் ஒரு தமிழ் கட்சி செய்தால் சீறுவது ஏன்? தமிழ்நாட்டிலிருந்தா அந்த பணம் சுரண்டப்பட்டது? மத்திய அரசாங்கத்திடம் இருந்துதானே! We should be happy somebody is getting us our due share that was taken from us for decades. தமிழ்நாட்டு மக்களின் பாக்கெட்டிலேயெ கைவிட்டு நம்மையே சுரண்டி வந்த ஜெ கட்சிக்கு இது எவ்வளவோ மேல்தான். "கங்கை கொண்டான்", "கடாரம் வென்றான்", "இமயத்தில் கொடி நாட்டினான்", "கனக விசயரைக் கல் சுமக்க வைத்தான்" என்று சோழமன்னன் பற்றி இலக்கியம் பாடும் தமிழர் அதே சோழ மண்ணைச்சேர்ந்தவரின் கட்சி அதே conquering ஐ repeat செய்யும்போது இகழ்வது ஏனோ?



ஊழல் ஊழல் ! நமக்கு பெருமை தேடித் தரும் யோக்கியமான தலைவர் தமிழகத்தில் இல்லையா? என்பவர்களுக்கு என் பதில் இதுதான். ’ஊழல் என்பது உலக அரசியலில் கலந்துவிட்ட இணைபிரியாத ஒன்று. அமெரிக்காவில் கூட பெரிய புஷ், சின்ன புஷ் இருவருமே சவுதி ஆயில் கம்பனிகளில் சம்பந்தப்பட்டிருந்ததும், துணை ஜனாதிபதி டிக் சேனியின் ஹாலிபர்ட்டன் ஊழலும் அனைவரும் அறிந்ததே. இந்தியாவை பொருத்தவரை காங்கிரஸ் ஊழலில் பழம் தின்று கொட்டை போட்ட கட்சி. தமிழ்நாட்டை தவிர எல்லா மாநிலங்களிலும் அவர்கள் பல வருடங்கள் அடித்த கொள்ளை பல லட்சம் கோடிகளைத் தாண்டும். ’ஐயோ! ஊழலைக் கொண்டாடுறானே இவன், அபிஷ்டு! காமராஜர் மாதிரி ஊழலில்லாத தலைவரல்லவா தமிழ்நாட்டுக்கு தேவை. ஊழலை நியாயப்படுத்தும் பாகவதர் ஒழிக! என்று பின்னூட்டமிடப் போறவங்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் “ இப்போது உள்ள நிலையில் காமராஜை போன்ற ஊழலற்ற தலைவர் தமிழ் நாட்டை ஆண்டால் நாம் தலையில் துண்டு போட்டுக்கொண்டு கோயிலில் போய் உண்டைக்கட்டி வாங்கி தின்ன வேண்டியதுதான். எனவே தமிழ்நாட்டை காப்பாற்ற தலை சிறந்த ஊழலரசர் ஒருவரால்தான் முடியும்.” ‘ஏன் அங்க ஜெ வால் அது முடியாதா! அவங்க முன்னாடியே prove பண்ணவங்கதானே? என்று அவருக்கு ஓட்டு போடப் போகிறவர்கள் ஒன்றை நினைவு கொள்ளவேண்டும். எந்த தொழிலாக இருந்தாலும் emotional trip ல் செல்லாமல் கருமமே கண்ணாக இருப்பவர்தான் நமக்குத் தேவை. மாஃபியா கும்பலால் டைரக்ட் செய்யப்பட்டு அடிக்கடி உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொண்டு, மத்திய அரசையும் பகைத்துக் கொண்டு கிணற்றுத் தவளையாக உள்ளூரிலேயே ஆட்டயப் போடுவர்களால் தமிழருக்கு நன்மையில்லை. ஆடி கறக்கிற மாட்டை ஆடியும், பாடிக் கறக்கற மாட்டை பாடியும் கறக்கத் தெரிந்த ஊழல் விஞ்ஞானிகளால்தான் தமிழ்நாடு செழிப்படையும். சண்டை போடுறா மாதிரி போட்டு, வேண்டும்போது ப்ரஷர் குடுத்து, பங்கு போட்டுக் கொள்ள வேண்டிய இடத்தில் அவர்களுடன் ’கை’ கோர்த்து பங்கு போட்டுக் கொண்டு தமிழகத்திற்கு மேலும் செழிப்பை கொண்டு வருபவர் அல்லவா நவீன கால கங்கை கொண்டான்! அவர் மீண்டும் வருவது அல்லவா தமிழரும் தமிழ் தொழில்களும் உயர வழி!
இங்கிருந்து central poolல் சேர்ந்த பணத்தை தனக்காகவும், தன் stateற்காகவும் கோடி கோடியாக காங்கிரஸ் மற்றும் பல வடநாட்டு கட்சிகள் கொள்ளையடித்து வந்த நிலை மாறி, புயலோ, வெள்ளமோ தமிழ்நாட்டிற்கு உரிய நியாயமாக வந்து சேர வேண்டிய நிவாரணத்தொகை முழுமையாக கொடுக்கப்பட்டதில்லை என்கிற நிலை மாறி ‘உன் அடிமடியிலேயே வைக்கிறேண்டா கை’ என்று சூளுரைத்து செய்து காட்டும் செயல் வீரரல்லவா தமிழருக்கு வேண்டும்!. தமிழகத்தை இன்று முக்கிய IT மையமாகவும், வடநாட்டார் வேலை தேடி இங்கு கையேந்தி வரவும், இந்தியாவின் detriot ஆகவும் மாற்றிக் காட்டியது கொள்ளையர் என்றாலும் அது ஓ.கே!. வெள்ளைக்கார கொள்ளையரை ஏற்றுக் கொண்டு அடிமையாக இருந்த நமக்கு உள்ளூர்காரன் அதையே செய்தால் என்ன வேகுது! பல வளங்களை நமக்கு கொண்டு வந்து சேர்ப்பவர் சூழ்ச்சிக்காரரோ, ஊழல் பேரரசரோ, தில்லு முல்லு விஞ்ஞானியோ எனக்கு அக்கறையில்லை. என் வீட்டிலேயே கை வைத்தாரா என்று மட்டுமே பார்ப்பேன். பகவத்கீதையில் சொல்லியிருக்கிற படி Survival of the fittest என்கிற game விளையாடப்படும்போது நாம் மட்டும் பலமில்லாமல் சோனியாக இருக்க முடியுமா? அந்த பலத்தை பெற வேண்டுமானால் நாம் ஊழலில் சிறக்கவேண்டும்! இல்லையென்றால் நம் representatives ஆவது ஊழலில் வடநாட்டானை மிஞ்சி, முடிந்தவரை நம் பங்கை மத்திய அரசிடமிருந்து பெறவேண்டும். நாம் நெடுநாளாய் வடதிசை நோக்கி கையேந்தி இருந்த நிலமை மாறி, மிரட்டல், தாஜா, partnership என்கிற பல உத்திகளை உபயோகித்து தானும், தன் குடும்பமும் பயனடைந்து, வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பொசியுமாம் என்பதாய் இவ்வளமை எல்லா தமிழ் மக்களையும் அடையவேண்டும். இந்த வேலையை கருணாநிதி & கம்பனி திறம்படவே செய்து வருகிறது. அவர்களின் இந்தப் பணி இச்சமயத்தில் தேவையானதுதான். ஆகவே
தமிழர் தலைவா! மீண்டும் மீண்டும் வா! எமக்கு வேண்டும் வேண்டும் தா!

No comments:

Post a Comment