ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Saturday, February 5, 2011

ராஜா கைது - கதை, வசனம், இயக்கம் - அன்னை சோனியா மொய்னோ - விஸ்வாமித்ரா

ராஜா கைது - ஸ்பெக்ட்ரம் தொடர் நாடகத்தின் ஒரு காட்சி - கதை, வசனம், இயக்கம் - அன்னை சோனியா மொய்னோ - விஸ்வாமித்ரா

நம் மக்கள் டி வி சீரியல்களில் தினம் தினம் மூழ்கி முத்துக் குளிப்பவர்கள். ஆனால் அதே சீரியலில் முந்தா நாள் என்ன நடந்தது என்று கேட்டால் யாருக்குமே தெரியாது. மறந்து விடுவார்கள். ஆழ்ந்து கவனிக்கும் டி வி சீரியலிலேயே முந்தா நாள் நடந்த காட்சி நினைவுக்கு வராத பொழுது ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று அலட்சியமாக இருக்கும், குவாட்டர் பாட்டிலுக்கும் பிரியாணி பொட்டலத்திற்கும் இலவச டி வி க்கும் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் ஜனநாயகச் சோரம் போகும் ஓட்டைக் காசுக்கு விற்கும் நம் மக்களுக்கா இந்த ஸ்பெக்ட்ரம் சீரியலில் வரும் ஒரு சின்ன எபிசோடான ராஜா கைது நாடகம் நினைவில் நிற்கப் போகிறது?

இன்று இந்த கைது காட்சி. அனைவரும் விசிலடித்து கைத் தட்டி விட்டு மறந்து விடப் போகிறார்கள்.


சரவண பவனில் கால் கடுக்க க்யூவில் நின்று சாப்பிடும் நம் மக்களுக்கு ராஜகோபால் அண்ணாச்சி செய்தது என்ன அவரது இன்றைய இருப்பு என்ன என்பது தெரியுமா? 2001ல் ஒரு பெண்ணை அபகரிக்க அவளது கணவனை ஆள் வைத்துக் கொள்கிறார். அதற்காக விரைவுக் கோர்ட்டில் நான்கு வருடம் கழித்து (விரைவுக் கோர்ட்டிலேயே நான்கு வருடம்) அவருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை அளிக்கிறார்கள். அதில் இருந்து ஜாமீனில் வருகிறார். வியாபாரம் செழிக்கிறது. செல்வம் கொழிக்கிறது. அனைவரும் அவர் கொலையாளி என்பதையே மறந்து போன வேளையில் எங்கேயோ அவர் பெட்டி பெட்டியாகக் கொட்டிக் கொடுத்த பணம் விலை போகாத நிலையில் மீண்டும் சென்னை உயர்நீதி மன்றம் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் கொலை நடந்து 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் பத்தாண்டு தண்டனையை உறுதி செய்கிறது. அண்ணாச்சி சீரியலில் அதுவும் ஒரு காட்சி. அந்த சீரியல் இன்னும் முடிந்து விடவில்லை. உச்ச நீதி மன்றத்தில் 2009ம் ஆண்டில் இருந்து இன்று வரை அவரது கேஸ் இன்னும் உறங்குகிறது. கொலையாளி என்று ஹைக்கோர்ட்டால் தீர்ப்பளிக்கப் பட்டவர் எத்தனை வருடங்கள் ஜாமீனிலேயே கழிக்க முடியும்? அவர் வாழ் நாள் வரை என்பது இந்தியாவில் சாத்தியம். அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் என்று எடுப்பார்கள் என்று விசாரிப்பார்கள் என்பது ராஜகோபால் அனுதினமும் வணங்கும் அவரது அப்பன் முருகனுக்குக் கூடத் தெரியாது. முருகனின் வேல் பாயாத இடங்களிலும் சாம்பார் காசு பாயும். இந்தியாவில் நீதியை விலைக்கும் வாங்கலாம் ஒத்தியும் போடலாம்.

ஆனால் நீதியைத் தள்ளிப் போடுவதில் இந்தியாவின் நீதி மன்றங்களும் அரசாங்கமும் மதப் பாகுபாடு எல்லாம் பார்ப்பதில்லை. ஒரு கொலை செய்த ராஜகோபாலுக்கும் தண்டனை கிடையாது நூறு பேர்களைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கும் தண்டனை கிடையாது. ஒரே வித்தியாசம் ராஜகோபால் தன் மாளிகையில் சொந்தச் செலவில் மசாஜ் செய்து கொள்வார். அப்சல் குருவுக்கும், மதானிகளுக்கும் அரசாங்கம் தன் செலவில் மசாஜ் செய்து விடுகிறது. ஒரு கொலை செய்தால் வீட்டில் தங்கலாம் நூறு கொலை செய்தால் அரசாங்கத்தின் ராஜ உபச்சாரம் கிடைக்கும். ராஜகோபாலுக்கும் அப்சல் குருவுக்கும் கசாப்புக்கும் இந்தியாவின் நீதி மன்றங்களில் தண்டனை அளிக்கும் பொழுது அவர்கள் காலம் முடிந்து அவர்களின் பேரப் பிள்ளைகளின் காலங்களும் முடிந்திருக்கும்.

ராஜகோபால் போன்ற முதலாளிகள் அப்சல் குரு போன்ற பயங்கரவாதிகளுக்கே இவ்வளவு சலுகை என்றால் சகல வல்லமை படைத்த அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு சலுகை அளிக்கப் பட வேண்டும்? இன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் ஓரளவுக்கு நம்மில் ஒரு சிலருக்கு நினைவில் இருக்கலாம் ஆனால் நரசிம்மராவ் அமைச்சரவையில் இதே தொலைத் தொடர்பு மந்திரியாக இருந்த சுக்ராமை எவருக்கும் நினைவில் இருக்கப் போவதில்லை. அது நாம் அனைவரும் மறந்து விட்ட காங்கிரஸ்காரர்களின் மற்றொரு மெகா சீரியல் சுக்ராமின் மெகா ஊழல். சுக்ராமின் சப்தர்ஜங் என்க்ளேவ் பங்களாவின் பாத்ரூம்களில் கட்டுக் கட்டாக குவித்து வைக்கப் பட்டிருந்த லஞ்சப் பணத்தை அள்ளிச் சென்றார்கள். டி விக்களில் காட்டினார்கள். அவருக்கும் ஒரு கீழ் நீதி மன்றத்தில் 1996ம் ஆண்டில் 13 ஆண்டுகள் தண்டனை வழங்கினார்கள். வழக்கு மேல் கோர்ட்டுக்குப் போனது. அங்கேயே நிரந்தரமாகத் தேங்கி நின்றது. அதன் பின் அந்தக் வழக்கு ஒரு இஞ்சு கூட முன்னேறவில்லை. சுக்ராமும் நிரந்த ஜாமீனில் கொள்ளையடித்தக் கோடிக்கணக்கான பணத்தில் சொகுசாக ஓய்வு எடுக்கிறார். அவருக்கும் வாழ்நாள் ஜாமீன் அளித்திருக்கிறார்கள். அவர் சாகும் வரை அந்தக் கேஸ் விசாரிக்கப் படப் போவதேயில்லை. சுக்ராம் இன்று இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி நகரில் தன் மாளிகையில் தான் கொள்ளையடித்த கோடிக்கணக்கான சொத்துக்களுடன் சொகுசாக வாழ்ந்து வருகிறார். அவரது பையன் அரசியலில் மற்றொரு சுக்ராமாக வளர்ந்து வருகிறான். பி ஜே பி கூட வெட்க்கம் மானம் ரோசம் எல்லாவற்றையும் எடியூரப்பாவிடம் விற்பதற்கு முன்பாகவே சுக்ராமிடம் அடகு வைத்து அவரது கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. சுக்ராமுக்கு யார் தண்டனை தரப் போகிறார்கள். அவரது வழக்கு இன்னும் ஹைக் கோர்ட்டுக்கே செல்லவில்லை. இப்பொழுது அவருக்கு வயது 80க்கும் மேல். இன்னும் செஷன்ஸ் கோர்ட், ஹைக்கோர்ட், ஹைக்கோர்ட் பெஞ்ச், சுப்ரீம் கோர்ட், சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் என்று இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் விசாரிக்கப் படப் போவதோ தண்டனை கிட்டப் போவதோ கிடையாது.

இந்தியாவில் அரசியல்வாதிகள் அதிலும் காங்கிரஸ் தி மு க போன்ற கட்சியின் அரசியல்வாதிகள் உறுதியாக எந்தக் காலத்திலும் தண்டிக்கப் படப் போவதே கிடையாது. அது உறுதியாகத் தெரிந்து வைத்திருப்பதினால்தான் நகர்வாலா, குவோ எண்ணெய் ஊழல் போன்றவற்றில் துவங்கி போஃபோர்ஸ், காமன் வெல்த் கேம்ஸ், ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் வரை அலுக்காமல் சலிக்காமல் எந்த வித பயமும் இல்லாமல் தொடர்ந்து இந்தியாவை நேருவின் வாரிசுகள் கொள்ளையடித்து வருகிறார்கள். இந்தியர்களுக்கு அடிமையாக இருப்பதில் ஒரு தனியாத போதை, சுகம் உள்ளது. முகலாயர்கள், பிரிட்டிஷ்காரர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள் எல்லாம் ஆண்டு விட்டார்கள். இந்த இத்தாலிக்காரர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் அவர்களுக்கும் ஒரு பெரிய வாய்ப்பைக் கொடுப்போமே என்று தாராளமாக கொள்ளையடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். இத்தாலியர்கள் ஈவு இரக்கமற்ற கொள்ளை கொலைகளுக்குப் பேர் போனவர்கள். உலகத்தின் முக்கியமான நகரங்களில் அவர்களது மாஃபியா ராஜ்யங்கள் இன்றும் கொடி கட்டிப் பறக்கின்றன. இத்தாலியப் பிரதமர் தன் வீட்டையே ஒரு மாபெரும் ரெட் லைட் ஏரியாவாக நடத்தி வருபவன். அப்பேர்ப்பட்ட ஒரு குலப் பெருமையை நம் பாரதத்தின் அன்னை சோனியா மாதா மட்டும் விட்டுக் கொடுத்து விடுவாரா என்ன? போஃபோர்ஸில் ஆரம்பித்த இத்தாலியக் கொள்ளை இன்று வரை ஓயவில்லை. இந்தியாவின் கடைசி கல் மண் தூசியைக் கொள்ளையடிக்கும் வரை சோனியாவின் கொள்ளைக் கூட்டம் ஓயப் போவதில்லை. நாமும் அதற்கான ஆதரவதைத் தொடர்ந்து அளிப்பதை நிறுத்தப் போவதும் இல்லை.

இந்த ஸ்பெக்ட்ரம் நாடகத்தின் முழு சூத்திரதாரி சோனியா மொய்னோ. ஜூனியர் விகடன் போன்ற மஞ்சள் பத்திரிகைகள் ஏதோ கருணாநிதியும், சோனியாவும், மன்மோகனும் உத்தம புத்திரர்கள் போலவும் அவர்களுக்கு ராடியா என்றால் யார் என்று தெரியாதது போலவும் கதை விடுகின்றன. கருணாநிதியின் நா தழு தழுத்தது, குரல் கர கரத்தது, மன்மோகன் வாளை எடுத்துச் சுழற்ற ஆரம்ப்பித்து விட்டார், சோனியா ஊழலை எதிர்த்துப் புயலெனக் கிளம்பி விட்டார் என்றெல்லாம் வாரா வாரம் இவர்களுக்கு சோப்புப் போட்டு தூய்மைப் படுத்தும் வேலையில் கிழக்கின் பத்ரியை மிஞ்சி விடுகிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் மட்டும் அல்ல போஃபோர்ஸ் துவங்கி ஆதர்ஷ் வரை அனைத்து ஊழல்களுமே மிகக் கச்சிதமாகத் திட்டமிட்டு நடத்தப் படும் ஒரு மாபெரும் மாஃபியாக் கொள்ளை. அதன் முழு ஸ்கிரிப்டுமே சோனியாவிடம் மட்டுமே உள்ளது. கருணாநிதியும், மன்மோகனும், ராஜாவும், கபில் சிபலும், சிதம்பரமும் அவர்களுக்கு அளிக்கப் படும் வேடங்களை கொடுக்கப் பட்ட வசனங்களைப் பேசி நடித்து விட்டுப் போகிறார்கள். இதில் அனைவருமே கச்சிதமான பாத்திரங்கள். ராஜாவை என்று கைது செய்ய வேண்டும் எப்படி அது நடக்க வேண்டும் என்பது வரை கருணாநிதிக்கும் தெரிந்தே நடத்தப் படும் ஒரு சீரியலின் காட்சிகள் மட்டுமே. சற்று பின்னே போய் போஃபோர்ஸ் ஊழலைப் பார்க்கலாம்
போபோர்ஸ் ஊழல் காங்கிரஸ் தலைமையில் அமைக்கப் பட்ட ஜே பி சி குழுவினால் நீர்த்துப் போகச் செய்யப் படுகிறது. ராஜீவின் ஊழல் மறைக்கப் பட்டு மீண்டும் அவர் பிரதமராகியிருந்திருக்க வேண்டியது. அடுத்து வந்த வாஜ்பாய் அரசினால் குவட்ரோச்சியின் பணத்தை முடக்க மட்டுமே முடிந்தது. மீண்டும் மன்மோகன் அரசு வந்தவுடன் முதலில் செய்த வேளை இன்றைய கர்நாடாக கவர்னராக இருந்து கொண்டு ஊழல் பற்றி வாய் கிழியப் பேசும் பரத்வாஜ் என்ற குள்ளநரி குவட்ரோச்சின் லண்டன் வங்கிக் கணக்கை மீண்டும் திறந்து விடச் சொல்லி குவட்ரோச்சி தன் வங்கிப் பணத்தை எடுத்துக் கொண்டு போக அனுமதிக்கப் பட்டதே. கொடுக்கப் பட்ட பாத்திரங்களை கச்சிதமாக பரத்வாஜும், மன்மோகனும் நடத்தி முடிக்கிறார்கள். குவட்ரோச்சியை அநாவசியமாக நாம் துன்புறுத்தி விட்டோம் என்று அறிக்கை விடுகிறார் மன்மோகன். மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட தகவலே தெரியாது என்று சொல்லும் மன்மோகன் குவட்ரோச்சியை அநாவசியமாக சங்கடப் படுத்தி விட்டோம் என்று சொல்லி மன்னிப்புக் கேட்க்கத் தெரிகிறது.

என்னதான் இத்தாலிய சோனியா திறமையாக கதை வசனம் எழுதினாலும் கூட அவரது திரைக்கதையில் இல்லாத பாத்திரங்களும் சம்பவங்களும் நாடகத்தில் அடிக்கடி நுழைந்து விடுகிறார்கள். இருந்தாலும் அவர்களையெல்லாம் திறமையாகச் சமாளித்து மீண்டும் சீரியலை சரியான பாதையில் கொண்டு வருவதில் தான் அவரது பரம்பரை மாஃபியா திறமை அனைத்தும் வெளியில் வருகிறது. அப்படி போஃபோர்ஸ் விஷயத்தில் எதிர் பாராமல் வந்த புதிய திருப்பம் தான் சமீபத்திய ட்ரிப்யூனல் ஒன்று வழங்கிய தீர்ப்பு. போஃபோர்ஸில் ஊழலே நடக்கவில்லை கமிஷனே கொடுக்கவில்லை குவட்ரோச்சி அப்பாவி என்று குவட்ரோச்சிக்காக கண்ணீர் விட்ட மன்மோகன் சிங்கும், குவட்ரோச்சியின் பணத்தை அக்கிரமாக இந்தியா முடக்கி வைத்தது தவறு என்று சொல்லி சி பி ஐ ஐ விட்டு லண்டன் வங்கியில் இருந்த பணத்தை குவட்ரோச்சிக்குத் திருப்பிக் கொடுக்க வைத்த கயவன் பரத்வாஜும் இவர்களை இயக்கிய சோனியாவும் எல்லாமே சுபம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட வேளையில் இப்பொழுது மீண்டும் எங்கிருந்தோ வந்த ஒரு ட்ரிப்யூனல் கொடுத்த கமிஷனுக்கு வருமான வரி கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இப்பொழுது இந்தப் பூதத்தை அமுக்க மீண்டும் சோனியா ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்ய வேண்டும். மாஃபியாக்கள் போல இந்த எதிர்பாராமல் வரும் பாத்திரங்களின் கதைகளை அவ்வப் பொழுது கணக்குத் தீர்த்து விட்டால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று அவர் நினைக்கலாம். ஏற்கனவே சஞ்சய் காந்தி முதல் ராஜசேகர ரெட்டி வரை தீர்க்கப் பட்ட பல கணக்குகளையும் நாம் இவர்கள் இயக்கிய சீரியலில் பார்த்துத்தான் வருகிறோம்.

ஒரு ஊழலை ஊத்தி மூடுவதற்கு முன்பாகவே அடுத்த பூதம் கிளம்பி விடுகிறது. ரஷ்யாவின் கே ஜி பி சோனியாவுக்கும் ராஜீவுக்கும் கொடுத்த்ட பத்து மில்லியன் டாலர்களை ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கும் விபரம் இப்பொழுது மீண்டும் எழுகிறது. ஜெர்மன் அரசிடம் வேண்டுமென்றே திட்டமிட்டே ஒரு சிக்கலான விதிமுறையின் கீழே கள்ளப் பணம் வைத்திருப்பவர்களின் விபரங்களை மன்மோகன் அரசு பெற்று அதைக் காரணம் காட்டியே அதை வெளியிட முடியாது என்று பிடிவாதமாக மறுத்து வருகிறது. உண்மை என்னவென்றால் அந்த விதிமுறையின் கீழ் இல்லாமலேயே சாதாரணமாகவே அந்தப் பட்டியலை அரசாங்கம் பெற்றிருக்க முடியும். இந்திய அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளியில் வந்தால் ஜெர்மனிக்கு என்ன பிரச்சினை? சுப்ரீம் கோர்ட் மீண்டும் மீண்டும் கேட்டும் வெளிநாட்டு வங்கிகளில் கள்ளப் பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை அரசு தெரிவிக்கவே தெரிவிக்காது என்று பிடிவாதமாக மன்மோகனும், பிரணாப்பும் மறுத்து வருகிறார்கள். யாரைப் பாதுகாக்க இந்த விதிமுறை நாடகம்? இது சீரியலின் மற்றொரு சீரியசான காட்சி இந்தக் காட்சியையும் மிக எளிதாக இத்தாலிய அன்னையின் வசனங்கள் கடந்து செல்லும், நாம் அந்தக் காட்சியையும் காணத்தான் போகிறோம். மாஃபியா பள்ளிக் கூடத்தில் படித்த திறமையான கதாசிரியர் சோனியாவின் ஒரே எரிச்சல் சுப்ரமணியன் சுவாமிகளும், கோபிக் கிருஷ்ணன்களும் மட்டுமே. கே ஜி பாலகிருஷ்ணன்களும், தாமஸ்களும், கபில் சிபல்களும் இருக்கும் வரை சுப்ரமணியன் சுவாமிகளும் கோபி கிருஷ்ணன்களும் பெரிய பொருட்டல்ல என்று சோனியா தீர்மானத்திற்கு வந்ததினாலேயே சஞ்சய்காந்திகளுக்கும், மாதவ்ராவ் சிந்தியாக்களுக்கும், ராஜசேகர ரெட்டிகளுக்கும் ஏற்பட்ட நிலை இவர்களுக்கு ஏற்படாமல் இது வரை பிழைத்திருக்கிறார்கள்.


காமன் வெல்த் ஊழலில் சுரேஷ் கல்மாடி ஒரு பலியாடு பாத்திரம் உண்மையான பயனாளிகளுக்காக அவருக்கு உரிய பங்கைக் கொடுத்து விட்டு பலியாடாக நடிக்கச் சொல்லுகிறார்கள் அவரும் திறமையாக நடிக்கிறார். காமன்வெல்த் என்றால் பொதுச் சொத்துத்தானே? அதனால் அது நாட்டின் முதல் குடும்பத்தின் பொதுச் சொத்தாகி விட்டிருக்கிறது. சுரேஷ் கல்மாடி ஒரு சின்ன அடியாள் மட்டுமே பணப் பரிவர்த்தனை முழுவதுமே மன்மோகனின் முழுக் கட்டுப்பாட்டிலேயே விநியோகம் செய்யப் பட்டிருக்கிறது. ராகுல் வின்சியின் அரசியல் ஆலோசகர் மூலமாகக் கடத்தப் பட்டிருக்கிறது என்று சுப்ரமணிய சுவாமி இதை பகிரங்கமாக அறிவித்த பின்னரும் கூட அவர் மீது அன்னை சோனியா இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வினோதமானது. ஸ்பெக்ட்ரத்துக்கு ஒரு ராஜா போலவே காமன் வெல்த்துக்கு ஒரு கல்மாடி, ஆதர்ஷுக்கு ஒரு சவான். பெரிய பெரிய ஜமீந்தார்களுக்கு எல்லாம் விசுவாசமான ஊழியர்கள் இருப்பார்கள். ஜமீந்தார் எவ்வளவு பெரிய கொலையைச் செய்தாலும் கூட இந்த ஊழியர்கள் ஆஜராகி நாங்கள் தான் அந்தக் கொலையைச் செய்தோம் என்று பொறுப்பேற்றுக் கொள்வார்கள். குறைந்த பட்ச தண்டனையையும் ஜமீன்ந்தார் விசுவாசத்திற்கு அளிக்கும் பணத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அவர்களைப் போன்ற விசுவாசமான கூலிகள் இந்த ராஜாக்களும், கல்மாடிக்களும், மன்மோகன்களும்.

இப்பொழுது மீண்டும் ஸ்பெக்ட்ரம் நாடகத்தின் லேட்டஸ்ட் எபிசோடான ராஜா கைது விவகாரத்துக்கு வருவோம். தி மு க வில் ராஜாக்கள் கைதாவது சில மாதங்களிலேயே மக்கள் மறந்த பின்னர் அவர்களுக்கு மீண்டும் பதவிக்கள் அளிக்கப் படுவதும் புதிது அல்ல. ஏற்கனவே கொடூரமான சித்ரவதை வழக்கில் கைதான இன்னொரு ராஜாவுக்கு இப்பொழுது மீண்டும் பதவி வழங்கப் படுகிறது. போலீஸ் அதிகாரியின் குடும்பத்தையே பூண்டோடு கொன்ற மந்திரியின் உறவினரை மந்திரி அரசாங்கக் காரில் போய் சிறையில் விசாரிக்கிறார். தினகரன் பத்திரிகையில் கொளுத்தப் பட்டவர்கள் அனைவருமே தங்களுக்குத் தாங்களே தீ வைத்துக் கொண்டபடியால், தா கிருஷ்ணன் தன்னைத் தானே குத்திக் கொண்டு செத்த படியாலும் அஞ்சா நெஞ்சர்கள் மத்திய மந்திரியாகிறார்கள். அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்துடன் தங்களைத் தாங்களே கொன்று கொண்டபடியால் நாளைக்கு யாரேனும் முதல்வராகவும் கூடும். ஆக இந்த ஸ்பெக்ட்ரம் சீரியலில், இந்தத் தருணத்தில் ராஜா கைது என்ற பெயரில் அரசாங்கச் செலவில் ராஜ உபச்சாரம் அனுபவிக்க வேண்டும் என்பது அன்னையின் வசனம். அந்தக் காட்சி இப்பொழுது அரங்கேறுகிறது. ஆக ராஜா கைதைக் கண்டு இந்தியாவில் நீதி பிழைத்து விட்டது. அன்னை ஊழல்களை அழிக்கக் கிளம்பி விட்டார். கருணாநிதி ஊழல் சூரனை சம்காரம் பண்ணப் போகிறார் என்று யாரும் ஜூ வி போன்ற அபத்தச் செய்திகளைப் படித்து விட்டுக் கனவு காண வேண்டாம். எதுவும் நடக்கப் போவதில்லை. இந்தியாவில் எப்பொழுதுமே அதர்மம் மட்டுமே வெல்லும். அதர்ம்மம் மீண்டும் மீண்டும் வெல்லும் கவலையே வேண்டாம்.

பார்த்தாயா ஊழலைக் கண்டு எங்கள் அன்னை பொறுக்க மாட்டார் ராஜாவைக் கைது செய்து விட்டார் என்று பிரச்சாரம் செய்யலாம். தி மு க வும் ராஜாவின் ஒன்றையணாப் பதவியில் இருந்து விலக்கி வைத்து விட்டு ஆறு மாதம் கழித்து மந்திரி பதவி கொடுப்பார்கள். ஆனால் தேர்தலின் பொழுது ஊழல் செய்வது யாராக இருந்தாலும் தலைவர் பொசுக்கி விடுவார் பொசுக்கி என்று பிரச்சாரம் செய்யலாம். ராஜாவையே கைது செய்து விட்டார்கள் இனி ஜே பி சி யாவது கோ பி சியாவது போய் எல்லோரும் பட்ஜெட்டுக்கு ஆதரவு கொடுங்கப்பா என்று உதிரி எதிர்க் கட்சிகள் மீண்டும் காங்கிரஸ் ஆதரவுக்குப் போய் விடும். பிப்ரவரி 5 சுப்ரமணிய சுவாமியின் கேஸ் விசாரணைக்கு வரும் பொழுது அதுதான் அரெஸ்ட் செஞ்சாச்சே அப்புறம் என்னப்பா என்று கோர்ட்டில் கேசை ரத்து செய்து விடுவார்கள். ராஜாவுக்கு நெஞ்சு வலி [ edited] வலி எல்லாம் எடுத்து உடனே டெல்லியின் ஐந்து நட்சத்திர மருத்துவமனையில் ஜாமீன் கிடைக்கும் வரை கைது காலத்தை அனுபவிப்பார் அதற்கும் அரசு செலவு செய்யும். பிரிவினைவாதம் பேசியவர்கள் அமெரிக்காவில் செத்தால் கூட அரசு செலவில் விமானம் வைத்து அழைத்து வரும் அரசு அல்லவா நம் அரசு? ராஜாவை கைது செய்ததுடன் எல்லாமே முடிந்து விட்டது நீதி கிடைத்து விட்டது என்றொரு பிம்பம் எண்ணம் மக்கள் மனதில் உருவாகும். ராஜாவுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்ட பின்னால் அனைத்துமே மெதுவான ஒரு கதிக்குச் சென்று விடும். மக்கள் மனதில் இருந்து ஒரு சுக்ராம் போல, ஒரு ராஜகோபால் அண்ணாச்சீ போல இந்த ராஜாவும் ஸ்பெக்ட்ரமும் மறைந்து போவார்கள். மீண்டும் ஒரு சரியான தருணத்தில் அன்னை சோனியாவின் கதை வசனம் எழுதிய காட்சியின் படி ஸ்பெக்ட்ரம் என்ற ஊழலே நடக்கவில்லை என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டே வழங்கும்.

பிப்ரவரி 5 சுவாமியின் வழக்கு விசாரணைக்கு ஒரு நாள் முன்பாக கைது படலத்தைக் காட்சியை வைத்துக் கொண்டால் போதுமானது என்று அன்னை முடிவு செய்ய காட்சி அரங்கேறுகிறது. இது வரவிருக்கும் தமிழ் நாட்டுத் தேர்தலிலும் காங்கிரசையும் தி மு காவையும் ஊழலைச் சகித்துக் கொள்ளாத தூய்மையான கட்சிகளாக காண்பிக்க உதவும். இதில் நம் ஜீ வி மாதிரியான ராம் ராம் ((சொன்னா ராம் செய்தா ராம்) பத்திரிகைகள் எழுதுவது போல கருணாநிதிக்கு எந்த வித அதிர்ச்சியும் இருக்கப் போவதில்லை. இதில் முக்கியமான பங்குதாரர்களான கருணாநிதி, மன்மோகன், ராஜா, சிதம்பரம் அனைவரும் பேசி வைத்தே இந்த கைது நாடகத்தை அன்னையின் ஆணைப் படி அரங்கேற்றுகிறார்கள்.

கைது என்றவுடன் ராஜாவை உடனே திஹார் ஜெயில் அரை டிரவுசர் போட்டு கையில் அலுமியப் பாத்திரமும் தலையில் குல்லாவும் போட்டு மோசமான கைதிகளின் வன்புணர்வுக்கு விட்டு விடுவார்கள் என்று யாரும் கனவிலும் எண்ணி விட வேண்டாம். ராஜாவுக்கு ஜாமீன் கொடுக்கப் படும் வரை உயர்தர உபச்சாரம் உறுதி செய்யப் படும். ஜாமீனுக்குப் பிறகு சில மாதங்கள் அவரது சொகுசு பங்களாக்களில் ஒன்றில் உல்லாசமாக ஓய்வு எடுப்பார். ராஜாவையே கைது செய்து விட்டோம் நாங்கள் தூய்மையானவர்கள் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்று சோனியாவும், மன்மோகனும், பிரணாப்பும், சிதம்பரமும் உத்தமபுத்திரர்களாக நாடெங்கும் பிரச்சாரம் செய்வார்கள். தமிழகத் தேர்தலில் தி மு கவும் காங்கிரசும் ஊழலை சகித்துக் கொள்ளாத கட்சிகள் என்று பிரச்சாரம் செய்யப் படும். பத்திரிகைகளும், டி விக்களும், புதிதாக புத்தகப் பதிப்பாளர்களும் கறைபடியாத தி மு க வுக்காக பிரச்சாரம் செய்து தி மு க , காங்கிரஸ் கூட்டுக் களவாணிகளை மீண்டும் ஜெயிக்க வைப்ப்பார்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து இந்தியாவில் இது வரை கொள்ளையடிக்கப் படமால் இருக்கும் சொத்துக்களைக் கொள்ளையடிப்பார்கள். சீரியலின் காட்சிகள் தடையின்றி ஓடும். ஸ்பெக்ட்ரமில் அடிக்கப் பட்ட ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான பணம் அனைவராலும் மெதுவாக மறக்கப் படும். ஸ்பெக்ட்ரம் மற்றொரு போஃபோர்சாக மாறும். ஆனால் பிச்சைக்காசாக வீட்டு மனையை உறவினருக்கு அளித்த எடியூரப்பா போன்றவர்கள் ஊழல்களுக்காக கழுவேற்றப் படுவார்கள். ராஜாவை கைது செய்த பின்னாலும் கூட மக்கள் நலனில் அக்கறையில்லாத மக்கள் விரோத பி ஜே பி பாராளுமன்றத்தை நடக்க விடாமல் தடுக்கிறது என்ற பிரச்சாரத்திற்கும் ராஜா கைது உதவும்.


ராஜாவை அழகிரியும், ஸ்டாலினும் எதிர்க்கிறார்கள் என்றும் ராஜாவை சஸ்பெண்ட் செய்யா விட்டால் தான் மந்திரிப் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று அழகிரி மிரட்டினார் என்று ஒரு புருடாவை, ஒரு தமாசை அடிக்கடி நமது ராம் ராம் பத்திரிகைகள் அவிழ்த்து விடுவதை நம் மக்கள் ஸ்பெக்ட்ரம் சீரியலின் ஒரு எபிசோடாக அடிக்கடி கண்டு விசிலடித்து மகிழ்ந்திருப்பார்கள். அதுவும் சீரியலில் ஒரு காட்சி மட்டுமே. ஆனால் அந்தப் பகுதிக்கு கதை வசனத்தை மட்டும் இளைஞன் படத்தின் வசனகர்த்தாவே எழுதிக் கொள்ளும் படி நாடகத்தின் இத்தாலிய இயக்குனர் சுதந்திரம் கொடுத்து விடுவார். அழகிரிக்கு மீது தினகரன் பத்திரிகையில் மூன்று அப்பாவிகளின் சாவுக்குக் காரணமானவர் என்ற எண்ணமும், வேறு விதமான இமேஜும் மக்கள் மனதில் உள்ளது. அதை மறைப்பதற்கும் சீரியலின் ஹீரோ ராஜாவே உதவுகிறார். ராஜா தான் எத்தனை நல்லவர். ஒரு பக்கம் சோனியாவுக்கும், மன்மோகனுக்கும், ராடியாவுக்கும், கனிமொழிக்கும், தயாளுவுக்கும் உதவுகிறார் என்றால் மறுபக்கம் அண்ணன் அழகிரியின் இமேஜை வளர்க்கவும் அதே ராஜாவே உதவுகிறார். அண்ணே நீங்க என்னை அடிப்பது போல அடிங்க. நானோ கெட்டவனாகிப் போனேன். 1.76 லட்சம் கோடி கொள்ளைக்காரனாகிப் போனேன் என்னை இந்த சமயத்தில் திட்டினால் உங்களுக்கு இருக்கும் கெட்ட பிம்பம் எல்லாம் மறைந்து தூயவர், லஞ்ச ஊழலை எதிர்ப்பவர், தந்தையையே தட்டிக் கேட்ப்பவர், ஊழலுக்காக பதவியையே துறந்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கும் தியாகி என்ற பெயர் கிடைக்கும் சான்சை விடாதீர்ங்க என்றிருப்பார் போலும். ஸ்டாலினும் வந்த வாய்ப்பை விடாமல் ஊழலை எதிர்த்த உத்தமர் பெயரை ராஜாவைக் கண்டிப்பதாக பத்திரிகைகளில் வதந்தியைக் கிளப்பி விட்டு தட்டிக் கொண்டு போகிறார். இன்று நடைபெற இருக்கும் பொதுக் குழுவிலும் ஊழலை சகிக்க மாட்டோம் என்று ஊழலில் சர்க்காரியாப் பட்டம் வாங்கிய தமிழ் தாத்தா சூளுரைத்து கோர்ட் தீர்ப்பு வரும் வரை ராஜாவை கொ ப சே (அது என்ன கண்றாவிப் பதவியோ) பதவியில் இருந்து நீக்கி வைக்க தீர்மானம் போட்டு ஊழல் எதிர்ப்பில் சீரோ டாலரென்ஸ் உள்ள கட்சி தி மு க ஒன்றே என்பதை நிரூபிப்பார்கள்.
[ தற்போதைய செய்தி: ஒருவர் கைது செய்யப்பட்டுவிட்ட காரணத்தினாலேயே அவர் குற்றவாளியாகிவிடமாட்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆ.ராசா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த பிரச்சனையை பொறுத்தவரை திமுக ஒரு திறந்த புத்தகம். ]

ஆக ஒரே ஒரு ராஜாவை வைத்து சோனியா, கனிமொழி, ராஜாத்தி, அம்பானி, டாட்டா, ராடியா அனைவரும் பில்லியனர்களாகிறார்கள். அழகிரி , ஸ்டாலின் போன்றோர் உத்தமபுத்திரர்களாகிறார்கள். ராஜா ஒரு வாரமோ ரெண்டு வாரமோ அரசாங்க செலவில் மசாஜ் செய்து விட்டு புத்துணர்ச்சியுடன் ஆறு மாதம் கழித்து மந்திரியாகி விடுவார். ராஜாவின் ஜாதிக்காரர் கே ஜி பாலகிருஷ்ணனை போல இன்னுமொரு அமர்த்தப் பட்ட நீதிபதி உரிய பதவிக்கு வரும் பொழுது சுவாமிகள் போட்ட வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப் படும். நான் அப்போதே சொன்னேனே கேட்டீர்களா என்று கிழக்கு பத்ரி பதிவு எழுதுவர். ”ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல” என்றும் ஊருக்கு உழைத்த உத்தமர் ராஜா என்றும் புத்தகம் போடுவார். மக்கள் டாஸ்மாக் குவார்ட்டரை உள்ளே தள்ளி விட்டு இலவச டி வி யில் இளைஞன் பார்த்து விசிலடித்துக் கொண்டிருப்பார்கள். அனைத்தும் சுபமே. மங்களம். நியூயார்க்கிலும், சிக்காகோவிலும், இத்தாலியிலும் கஷ்டப் பட்டு துப்பாகி சுட்டு, உயிர்களை இழந்து சில மில்லியன்கள் கூட சம்பாதிக்க பல்வேறு பிறவி மாஃபியாக்கள் நாய் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நோகாமல் நொடியாமல் அடிமைகளின் உழைப்பில், எந்தக் கஷ்டமும் படாமல் இந்திய மக்களின் முட்டாள்த்தனத்தினால் மட்டுமே பல டிரில்லியன் டாலர்களை எளிதாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் ஊழல்களின் சூத்திரதாரி சோனியா.

சோனியா இயக்கும் நாடகங்கள் அனைத்திலும் தெளிவாக அவரது தனித்துவமான முத்திரையை பளிச் என்று காணலாம். அது போஃபோர்ஸ் ஊழல் நாடகமாக இருந்தாலும் சரி, ஸ்பெக்ட்ரம் ஊழலாக இருந்தாலும் சரி அவருக்கு என்று ஒரு பாணி உள்ளது. அந்த ஐந்து கட்டளைகள் படி எந்த விதமான ஊழலாக இருந்தாலும் மக்களை மறக்க அடித்து விடலாம் மீண்டும் அதை விடப் பெரிய ஊழல்களை நடத்தலாம்.

1. முதலில் ஊழலை செய்து முடித்து விடுவது. யாருக்க்கும் தெரியாமல் அமுங்கி விடும் என்று நம்புவது 2. வெளியில் தெரிய வந்தால் ஊழலே நடக்கவில்லை என்று சாதிப்பது. கட்சியின் படித்த பெரிய அறிவாளிகளயும் பிரச்சாரகர்த்தர்களையும் கொண்டு ஆளுக்கு ஒரு விதத்தில் பேசி மக்களைக் குழுப்புவது 3. அதையும் மீறி போய் விட்டால் ஒரு கமிட்டி அல்லது குழு அமைத்து விசாரணைச் செய்ய வைத்து ஊழலே நடக்கவில்லை என்று அறிக்கை விடுவது 4. மெதுவாக ஊழல்களைக் கையாளப் போகும் அதிகாரிகள் நீதிபதிகள் பதவியில் தன் அடியாட்களை அமர்த்துவது 5. அவர்களிடம் விசாரணை வரும் வரையில் காலம் தாழ்த்துவது. உரிய தருணத்தில் தன் அடியாட்கள் விசாரணையை நடத்துமாறு செய்து விஷயத்தை நிரந்தரமாக இழுத்து மூடுவது.


இந்தியாவில் படித்தவர்கள் மீது மரியாதையும், அபிமானமும் நம்பிக்கையையும் மக்கள் வைக்கின்றார்கள். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட சூத்திரதாரி சோனியா முதலில் தான் ஆக்ஸ்ஃபோர்டில் பட்டம் பெற்றதாகப் பொய் சொல்லி தேர்தலில் போட்டியிடுகிறார். அது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை அல்ல வெறும் டுயுட்ட்டோரியல் காலேஜ் என்று தெரிய வந்த பொழுதும் பொய் சொன்னதற்காக அவரை யாரும் கைது செய்யவில்லை மாறாக தியாகத் திருவுரு என்று போற்றி வணங்குகிறார்கள். தனக்கு பிரதமர் வாய்ப்பு சட்ட ரீதியாக கிட்டாது என்று தெரிந்தவுடன் நல்ல படித்த அடிமையாகத் தேர்ந்தெடுக்கிறார். இந்தியாவிலேயே உலகத்திலேயே மிகச் சிறப்பான கல்வித் தகுதிகளைக் கொண்ட ஒருவரை வைத்து தன் ஊழல்கள் அனைத்தையும் கச்சிதமாக நடத்துகிறார். அதில் மன்மோகனுக்கு பங்கு இல்லாமல் இருக்காது. இல்லாவிட்டால் இவ்வளவு படித்த ஒரு மேதை வெறும் பதவிக்காக மட்டுமே இத்தனை ஊழல்களையும் தானே பொறுப்பேற்று நடத்துவாரா? படித்தவன் சூது செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையில் ஏமாந்து போய் மக்கள் மீண்டும் மீண்டும் இந்த அயோக்கியனை நம்பி வாக்களித்தார்கள். தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் சோனியாவிடமும் மன்மோகனிடமும் கற்றுக் கொண்ட அதே பாடத்தை கையாண்டார்கள் ஸ்பெக்ட்ரம் விஷயத்தில். அப்பாவி மக்களிடம் மட்டும் அல்லாமல் இணையத்தில் படிக்கும் எழுதும் படித்த மக்களிடமும் கூட அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றால், ஐ ஐ டி யில் படித்திருந்தால் அவர் ஒரு நல்ல அறிவாளியாக இருப்பார் அவர் சொல்வதில் நியாயமும் உண்மையும் விஷயமும் இருக்கும் என்று நம்பினார்கள். மக்களின் நம்பிக்கையைப் பயன் படுத்தி ஊழல்களைத் திறம் பட நடத்தி வரும் மன்மோகன் போலவே அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரு அறிவாளியின் மீதான நம்பிக்கையைப் பயன் படுத்தி அவரை விட்டு இந்த ஊழல் பெரிதாக வெடிக்கும் முன்பாக இருந்தே பிரச்சாரம் செய்ய வைக்கப் பட்டது. ஸ்பெக்ட்ரம் என்ற பெயர் வருவதற்கு முன்பாகவே அப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக ராஜா இதைச் செய்திருக்கவே முடியாது என்ற பிரச்சாரத்தை முதலில் மெதுவாக ஆரம்பித்து பின்னால் வலிமையாகச் செய்ய ஆரம்பித்தார். உச்ச கட்டமாக ஸ்பெக்ட்ரம் சர்ச்சை (ஊழல் அல்லவாம் சர்ச்சையாம்) என்று பிரச்சாரக் கையேட்டை அடித்து வினியோகிக்க ஆரம்பித்தார். ஒட்டு மொத்த இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சோனியாவையும், ராஜாவையும், கருணாநிதியையும், கனிமொழியையும் நமக்குத் தெரியும் அவர்கள் இதைத்தான் செய்வார்கள். அவர்களுக்கு எந்த விதமான மனசாட்சியோ அடிப்படை அறவுணர்வோ கிடையாது. ஆனால் உண்மையிலேயே நம்பிக்கைத் துரோகம் செய்தவர்கள் தங்கள் அறிவை வைத்து விபச்சாரம் செய்த அறிவுச் சோரம் போன இந்த மெத்தப் படித்த மேதாவிகளேயாவார்கள். இவர்களே இந்த சீரியலின் அதிர்ச்சிகரமான நடிப்பை அளித்த பாத்திரங்களாவார்கள். படித்தவன் சூது செய்தால் ஐயோ என்று போவான் என்று பேசுவதெல்லாம் சும்மா கதை. அதெல்லாம் என்றுமே நடந்ததேயில்லை. படித்தவன் சூது செய்தால் அமோகமாக வாழ்வான் என்பதே நிதர்சனம்.


மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கும் தருணமே அந்த ஜனநாயகத்துக்கு அடிக்கப் படும் சாவு மணியாக இருக்கும். அந்த இறுதிக் கட்ட யாத்திரையை நோக்கித்தான் இந்திய ஜனநாயகம் என்று வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் அனைத்துத் தூண்களுமே இன்று செல்லரித்துப் போய், கரையான்களுக்கு உணவாகி, அழுகி துர்நாற்றம் எடுத்து ஜனநாயகத்தின் மீதும் அடிப்படை அறவுணர்வுகளின் மீதும் நம்பிக்கைக் கொண்டிருந்த குடிமகனின் நம்பிக்கையை அறவே இழந்து விட்டதுதான் இத்தனை ஆண்டுகால காங்கிரஸ் அரசின் மகத்தான சாதனையாகும்.

மக்கள் வாகெடுத்து நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த மன்மோகன் சிங் அரசு ஊழல்களின் ஊற்றுக் கண்ணாகி விட்டது.

ஜனநாயகத்தின் மற்றொரு தூணும் மக்கள் கொஞ்சமாவது நம்பிக்கை வைத்திருந்த நீதி அமைப்பு கே ஜி பாலகிருஷ்ணன் போன்ற புல்லுருவிகளாலும் அயோக்யர்களாலும் விலை போய் விட்டது

ராஜ்தீப் சர்தேசாய், பர்க்கா தத், வீர் சங்வி போன்ற பத்திரிகை உலக [ edited ] ஊடகம் என்னும் மற்றொரு தூணும் உளுத்துப் போய் விட்டது.

சி வி சி தாமஸ், சந்தோலியா போன்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள் முதல் தாலுகா ஆபீஸ் ப்யூன்கள் வரை ஒட்டு மொத்த அதிகார வர்க்கமெனும் தூணும் அழுகி நாறுகிறது.

இத்தகைய மோசமான கையறு நிலையில் நாம் வாழ்வை வெறுத்து செத்துப் போய் விட முடியாது. நம்மிடம் கடைசி சக்தி இருக்கும் வரை அராஜகங்களை எதிர்த்துப் போராடிப் பார்த்தே தீர வேண்டும், இது நமது அடிப்படை இருப்பு சார்ந்த பிரச்சினை. நம்மால் செய்யக் கூடியதெல்லாம் நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு வாக்கையும் பொறுப்புடன் பயன்படுத்துவதுடன் எப்பொழுதும் விழிப்புடன் இருப்பதுமே ஆகும்.

நம் அனைவரிடமும் ஓட்டுரிமை என்னும் சக்திவாய்ந்த ஒரு ஆயுதம் இருக்கிறது, அதைப் பயன்படுத்தி இந்தக் கொள்ளைக்காரர்களைப் பூண்டோடு ஒழிக்க உறுதி பூணுவோம். இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் அதற்கு ஒரு ஊக்கியாக விழிப்பூட்டும் நிகழ்வாக இருக்கட்டும். இந்தக் கெடுதியில் இருந்தும் கூட ஒரு நன்மை மலரட்டும்.

இன்று இந்தியாவுக்கு ஆண்டிமுத்து ராஜா ஏற்படுத்தியுள்ள இழப்பு லட்சம் கோடி ரூபாய்களாக இருக்கலாம். ஆனால் அதை விட மோசமான நம்பிக்கை இழப்பை நாம் மன்மோகன்,கபில் சிபல், மற்றும் படித்த மேதாவிகளிடம் இழந்திருக்கிறோம் அதுவே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அழிவுக் கொள்ளையர்களை இந்த அறிவுக் கொள்ளையர்களின் கேவலமான செயல்கள் மன்னிக்கவே முடியாதவை. கொள்ளை போன இந்த ஸ்பெக்ட்ரம் பணம் “நம் ஒவ்வொருவரது உழைப்பின் பயன்” என்பதை அறிவோம். நம் வீட்டுச் சொத்து கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது அவசியம். கொள்ளையர்களை இனம் கண்டு தண்டிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

பாடுபட்டு வெள்ளையர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரம் இன்று கொள்ளையர்கள் கைகளில் சிக்கிச் சீரழிகின்றது. நம் தேசத்தின் வளங்கள் அனைத்தும் சூறையாடப் படுகின்றன. இயற்கை வளங்களிலும், பொருளாதாரத்திலும், தார்மீக கோட்பாடுகளிலும், நேர்மை நீதி நியாயங்களிலும், அறவுணர்வுகளிலும் திவாலாகிப் போன ஒரு தேசத்தையா உங்களது குழந்தைகளுக்கு விட்டு விட்டுப் போகப் போகிறீர்கள்? சிந்தியுங்கள் நண்பர்களே நம் கடமைகளை உணருங்கள் செயல்படுங்கள்.

ஆகா முருகா